Episode 37

63 3 0
                                    

ருத்ரனும் நீலனும் கூடவே மாதவனும் மீராவும் அந்த அறையில் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர்........அப்போது அங்கு ஓடி வந்தாள் வைஷ்ணவி....."அரசரும் நயனா அக்காவும் வழக்கம் போல் வாட்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்......"⚔️மூச்சிறைக்க கூறினாள்.......

அனைவரும் பயிற்சி கூடத்தை நோக்கி ந்கர்ந்தனர்.........அங்கு வழக்கம்போல் இருவரும்  வாள்பயிற்சியில் ஆக்ரோஷமாக ஈடுபட்டிருந்தனர்⚔️.....வழக்கம்போல் இம்முறையும் ரகுபதியே வெற்றி பெற்றான்.......சற்றே சமாதானம் அடைந்தவர்கள்,மாதவனும் மீராவும் உடன் பிறரும் தங்களுக்காக காத்திருப்பதை கவனித்தனர்.......ரகுபதி அவர்களை நோக்கி வரவே,....மீரா பேச முற்பட்டாள்....அப்போது இடைப்பட்ட ரகுபதி,"பவானியை பற்றி பேசுவதற்காகதான் வந்திருக்கிறீர்கள் என்றால்,.....அதை பற்றி நான் பேச விரும்பவில்லை....."என்று கூறவே ,மீரா வாயடைத்து நின்றாள்

ரகுபதி அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டான்

அப்போது,தயக்கத்தோடே மெல்ல அடி வைத்து வந்தாள்  நயனா.....

ரகுபதியின் தீர்மானம் என்ன என்பதை அறிய அனைவரும் ஆர்வமாய் இருப்பது அவர்களின் பார்வையை வைத்தே நயனா புரிந்து கொண்டாள்,.......

ஒருவழியாய் தயக்கத்தை உடைத்தெறிந்தவள்......ருத்ரனை பார்த்தாள்...."ருத்ரா....நீ பவானிபுரிக்கு சென்று,சித்தப்பாவிடமும் பாட்டியிடமும் அனுமதி பெற்று,அவர்களையும் அழைத்து வா......உனக்கும் பவானிக்கும் திருமணம் மூத்தோர் ஆசியோடு நன்முறையில் நடக்க வேண்டும்.....நானும் என் கணவரும் மாப்பிள்ளை வீட்டாராக திருமணத்தில் முன் நிற்போம்....."நயனா கூற,....ரகுபதியின் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை,என்பது அனைவருக்கும் புரிந்தது......

மாதவன் எதுவும் பேசவில்லை....மீராவின் முகம் வாடிவிட்டது.....

"அரசரின் தீர்மானத்தில் மாற்றமில்லையா?.....☹️இதை அறிந்தால் பவானியின் மனம் வேதனை கொள்ளும் அல்லவா?....."ருத்ரன் கேட்டான்

"பவானி,தனக்கு ஒரு தீங்கு நேர்ந்தால்....தன் மீது அன்பு கொண்ட நபர்களின் மனம் என்ன பாடுபடும் என்பதை முன்பே சிந்தித்திருந்தால்......இப்போது அவள் மனம் வருந்தும் நிலை உருவாகியிருக்காது....."உறுதியோடு எடுத்துரைத்தாள் நயனா

ராமநயனம் Where stories live. Discover now