முள்ளும் மலரும் 2

11.1K 259 41
                                    

வாழ்க்கை வாழ்பவனுக்கே என்ற பழமொழியைத் தன் தாரக மந்திரமாய் கொண்டவன் கிருஷ்.. கேட்காமலே அவன் தேவைகளுக்கு அள்ளி அள்ளி பணத்தை இறைக்கும் தாத்தா மருதுபாண்டி.. அவன் செய்யும் குறும்புகளையும் தவறுகளையும் மறைத்து தனது தாய் தந்தையரின் திட்டலில் காப்பாற்றும் பாட்டி ரங்கம்மாள்.. உள்ளுக்குள் பாசம் இருந்தாலும் அதைக் கண்டிப்பான முறையில் காட்டும் அப்பா , அம்மா
அத்தோடு சித்தி, சித்தப்பா, அத்தை , மாமன்மார்கள் மற்றும் அவரது  மகன் மற்றும் மகள்கள் என அவன்மீது  உயிரையே வைத்திருக்கும் உறவினர்கள் என அவனைச் சுற்றி அன்பும் அதே சமயம் செல்வ செழிப்பும் சூழ்ந்து இருக்க என்றும் மகிழ்ச்சியுடன் திரிபவன் தான் கிருஷ்..

தாய்நாட்டிற்கு வந்து இரண்டு வருடங்கள் ஆனதால் ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று எண்ணி தனது கல்லூரி நண்பர்களுடன் வெளியே செல்லத் திட்டமிட்டான். ஆனால் அவனது போதாத நேரம் அவனது நண்பர்கள் இன்று பிசியாக இருக்க அவனது நெருங்கிய தோழி மேகா மட்டுமே வர நேர்ந்தது..
இருவரும் அந்த மதியம் முழுவதும் தியேட்டர் பீச் என்று சுற்றி விட்டு ஷாப்பிங் செய்யலாம் என ஒரு கடையில் நுழைந்தனர்.

காலையிலிருந்தே மீராவின் உள்ளுணர்வு ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதை உணர்த்தியிருக்க  அவளும் சற்று முன்னெச்சரிக்கையாக இருந்தாள்..ஆனால் விதி அவளைவிடவில்லை..

" கிருஷ் பேபி சாரி செக்சனுக்கு எதுக்குடா கூட்டிட்டு வந்த... நான் அதெலாம் வியர் பண்ண மாட்டேனு தெரியாதா " என்று அவன் தோளைத் தட்டினாள் கண்ணை உறுத்தும் வகையில் இறுக்கமாக உடை அணிந்திருந்த மேகா..
" பேபி இது உனக்காக இல்ல.. எங்க அம்மாவுக்கு நெக்ஷ்ட் வீக் பர்த்டே.. அதுக்குத்தான்.. அதான் உன்னை கூப்டேன்.. சோ சேட்..உனக்கும் சாரி பத்தி எதும் தெரியாதா.. இது முன்னமே தெரிஞ்சிருந்தா " என இழுக்கும் முன்னே " போதும் பேபி.. எனக்கு செலக்ட்லாம் பண்ணத் தெரியும்வா " என்று அவனது கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள்..

முள்ளும் மலரும் (முடிவுற்றது)Where stories live. Discover now