முள்ளும் மலரும் 12

6.3K 240 60
                                    

ஹேய் ராம் நான் பாட்டுக்கு பேசிட்டேன் இருக்கேன்.. நீ ஏன் அமைதியா இருக்க.. எனக்கு எவ்ளோ ஹேப்பியா இருக்கு தெரியுமா.. நீ எங்க வீட்டுக்கு வந்தது.. வா உன்னை எங்க தாத்தா பாட்டிக்கி்ட்டயும் அறிமுகப் படுத்துறேன் " என புன்னகையுடன் தனு கூற,

மீராவின் கண்கள் கலங்குவதைப் பார்த்ததும் ராம்
" அனு அதுவந்து எனக்கு முக்கியமான வேலை இருக்குமா" என்றான். அவளது முகமாற்றத்தை கவனித்து தனது எண்ணம் நிறைவேறியதை உணர்ந்து" உன்பேரு அனுயில்லயா..உன்பேரு . ஞாபகமில்ல.சாரிப்பா.. .  . கிளாஸ்ல பார்க்கலாம் " என்று அவள் முகத்தைக் கூட நேராக பார்க்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அவளது பெயர்கூட இவனுக்குத் தெரியவில்லை என்பதால் தனுவிற்கு வருத்தமாக இருந்தது. " தனு அவன் அப்படித் தான்..வேணும்னே இப்படித்தான் வெறுப்பேத்துவான்.  நீ வொரிப் பண்ணிக்காத.. நீ இப்ப தான அவங்கோட பேசற, போகப் போக புரி்ஞ்சுக்குவ " என்று நிலா சொல்ல" சரி " என்று தலையசைத்தாள்.

நிலா மற்றும் தனுவும் பேசிக் கொண்டிருக்க கிருஷ் அருகே வந்து நின்று கொண்டான்.

மீராவின் அருகே வந்து அமர்ந்த ராம் அவள் கண்கள் கலங்கியிருப்பதைப் பார்த்ததும் " அக்கா அழாத இங்க உன்னையவே எல்லாரும் பார்க்குறாங்க " என்று கூறியதும் தன்னை சமன்படுத்தியவள் அமைதியாக அமர்ந்தாள்.

மீராவின் வாடிய முகத்தைப் பார்த்ததும் அவளை சகஜப் படுத்த,
" என்ன மீரா வந்து நீபாட்டுக்கு உக்கார்ந்துட்ட,இது நம்ப வீடு மீரா எல்லாருக்கும் இந்த ஜூஸ் ஊத்திக் கொடுமா " என்று கீதா சொன்னதும் வேறு வழியில்லாமல் எழுந்து சென்றாள்.

அவள் சென்றதும் எழ நினைத்த ராமைக் கைப்பிடித்து தடுத்த கிருஷ்
" டேய் அரை டிக்கெட் கொஞ்ச நேரம் அமைதியா இருக்க மாட்டியாடா.. எப்ப பார்த்தாலும் அக்கா அக்கானு பின்னாடியே போய்கிட்டு இருக்க " என்று ராமைப் பார்த்து கிருஷ் சிரித்துக் கொண்டே கேட்கவும்,

முள்ளும் மலரும் (முடிவுற்றது)Where stories live. Discover now