முள்ளும் மலரும் 18

6.2K 217 113
                                    

தங்களது கடந்த காலத்தில் மூழ்கியிருந்தவனை மீராவின் புலம்பல் கலைத்தது.. தூக்கத்தில் எதையோ நினைத்து பயந்து அழுது கொண்டிருந்தாள்..

" மீரா அழாத.. எழுந்திரு.. உனக்கொன்னும் ஆகல.. " என்று அவள் கன்னத்தை தட்டியவாரே எழுப்பினான். கண்களைத் திறந்து கிருஷைப் பார்த்தவள் இன்னும் அழ ஆரம்பிக்க கிருஷிற்குத் தான் அவளை சமாதானப் படுத்த போதும் போதும் என்றானது.

அவளைத் தன்தோள் ஆதரவாக சாய்த்தவன் " ப்ளீஸ் மீரா நான் சொல்றத மட்டும் கேளு.. சரியா.. " என்றவனிடம் " ஐ அம் சாரி கிருஷ்.. நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல என்னை மன்னிப்பியா.. நான் ஒரு முட்டாள்டா.. எல்லாத்தையும் தப்பாவே தான் புரிஞ்சிக்குறேன்.. சாரி " என அழுதுகொண்டே கூறினாள்.

அவள் மன்னிப்பு மனதை உலுக்கினாலும் மன்னிக்க அவனால் இயலவில்லை.. அவனை ஒரு கொலைகாரனாக நினைக்கும் அளவிற்கு துணிந்த அவளை அவன் எவ்வாறு மன்னிப்பான்.  அதும்வெறும் வாய்வார்த்தைக்கு கூறிய வார்த்தைக்காக.. இருப்பினும் கவலையில் இருக்கும் அவளை இன்னும் வருத்த வேண்டாம் என எண்ணி " மன்னிச்சிட்டேன்.. அழாத மீரா. வா வெளிய போலாம் " என அவளை எழுந்து நிற்க வைத்தான்.

அவன் தன்னை மன்னிக்கவில்லை என்பதை உணர்ந்தவள் அப்படியே நிற்க, அவளைக் கண்டுகொள்ளாமல் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்று விட்டான்.

தயங்கியபடியே வெளியே வந்த மீரா கிருஷைத் தேட, அதற்குள் ராம் அவளருகே வந்து " அக்கா வீட்டுக்குப் போலாமா .. இங்க இருக்கப் பிடிக்கலக்கா.. " என்று சோகமாக கேட்க அப்போதுதான் ராமின் முகத்தைப் பார்த்தாள். அவனது முகமும் கலையிழந்து இருந்தது.

வீட்டிற்கு சென்று கேட்டுக் கொள்ளலாம் என நினைத்தவள்
" சரி வாடா " என்று அவளைக் கீழே அழைத்துச் சென்றாள்.

அதே நேரத்தில் பூஜை முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
மீரா வருவதைப் பார்த்ததும் அவளிடம் வந்த கீதா கையில் ஒரு தாம்பூலத்தட்டைத் தந்து விட்டு,தயக்கமாக " மீரா கிருஷ் உங்கிட்ட எல்லாத்தையும் பேசிட்டானு நினைக்கிறேன்.. இந்நேரம் உங்க அப்பா அம்மா இருந்திருந்தாக் கூட இதத்தான் பண்ணிருப்பாங்க.. ப்ளீஷ் மீரா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுமா.. நீயும் எத்தனை நாள்தான் தனியா தம்பி தங்கையோட கஷ்டப் படுவ.. ராமையும் நிலாவையும் நாங்க பார்த்துக்கறோம்டா.. சரினு சொல்லு " என்று கூறினார்.

முள்ளும் மலரும் (முடிவுற்றது)Kde žijí příběhy. Začni objevovat