முள்ளும் மலரும் 14

6.4K 209 54
                                    

மறுநாள் காலை கல்லூரி வளாகத்தினுள் அலைபேசியில் மீரா யாருடனோ பேசிக் கொண்டு இருந்தாள். " டேய் ஒன் வீக்கா.. என்னால அவ்ளோ நோட்ஸ்லா எழுத முடியாது. நீ அங்க புல் கட்டு கட்டுவ.. நான் இங்க உனக்கு கை வலிக்க எழுதனுமா.. "
.
.
.
" சரி சரி அழுகாத எழுதரேன்..
.
.
.
சரிடா.. யார்டயும் சண்டை போடல போதுமா.. நீ சீக்கிரமா வாடா.பாய்" என்று பேசிவிட்டு திரும்பும்போதே கையில் யாரோ முகத்திற்கு நேராக ஒற்றை வெள்ளை ரோஜாவை நீட்டினார்கள்..

" ஹாய் மீரா. குட் மார்னிங்.. என்னை காலங்காத்தல யாரயோ போன்ல வறுத்தெடுத்துட்டு இருந்த போல.. யாரு அந்த பாடி கார்ட் உதயாவா.. நீ பேசினது வெச்சுப் பார்க்கும்போது அவன் தொல்லை கொஞ்ச நாளைக்கு இல்ல போல" என்று குதுகளித்தான் நேற்று அவ்வளவு திட்டுகள் வாங்கிய கிருஷ்..

அவன் இன்றும் வருவான் என்பதை எதிர்பாராதவள் " கிருஷ் உங்கிட்ட பொறுமையா தான சொன்னேன்.. ஏன் புரிஞ்சிக்காம இப்படி நடந்துக்கிற " என்று தனது எரிச்சலைக் கட்டுப் படுத்திக் கொண்டு கூற,

" என்ன மீரா நீ.. இது வாழ்க்கை பிரச்சனை அவ்வளோ ஈசியால உன்னை விட முடியாது.  அந்தக் கஜினி முகமது மாறி தொடர்ந்து படை எடுத்துட்டே இருப்பேன் "என்றான் கூலாக..

" ச்சே நீயும் அந்தக் கேவலமான எடுத்துக்காட்டும்.. வரலாறு தெரியாதவன்லாம் எதுக்கு அதைப் பத்தி பேசனும் " என வாயில் முனுமுனுத்துக் கொண்டே நகர,

" ஓ உங்களுக்கு தெரியும்ல அதை சொல்ல வேண்டியது தான " என அவள் கைப்பிடித்துத் தடுக்க, அவனது கையை தட்டிவிட்டவள்
" மகமது ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் தோல்வி ஒன்னும் அடையல.. அவரால எவ்ளோ முடியுமோ அதை நல்லா சுருட்டிக்கிட்டு தா போனாரு.. கடைசியா இங்கையே டேராப் போட்டு தங்கிட்டு இருந்த மொத்தத்தையும் சுருட்டிட்டு போனாரு.. என்னைப் பொருத்தவரை அவர் 17 முறையும்  தோல்விலா அடையவே இல்ல. எல்லா டைமும் ஜெயிச்சிட்டு தான் போயிருக்காரு " என தனது கருத்தை வெளிப்படுத்த,

முள்ளும் மலரும் (முடிவுற்றது)Where stories live. Discover now