முள்ளும் மலரும் 15

6.5K 214 47
                                    

" கிருஷ் உன்னைத் தேடி உன் மீரா உங்கிட்டையே வந்திட்டன்டா.. என்னடா பண்ற " என்று விடிந்தும் எழாமல் தூங்கிக் கொண்டிருந்தவனை உலுக்கினாள் மீரா..

அவன் அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்த போது தான் தெரிந்தது.. இன்றும் அதே கனவுத் தன்னை தொல்லை செய்தது என்பதை..

தன்னை இப்படி புலம்ப வைத்துவிட்டாளே என மீராவைத் திட்டியவன் மீண்டும் மெத்தையில் படுக்கப் போக , " டேய் அண்ணா அண்ணி வந்திருக்காங்கடா.. எழுந்து தொலைடா " என்ற சௌமியாவின் குரல் கேட்டது..

" சும்மா இருடி..மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணப் பிறகு கவிதா அண்ணி இங்க வருவாங்களா.. காலங்காத்தால  பொய் சொல்லிக்கிட்டு.. போடி.. மனுசனோட நிலைமை தெரியாம" என பெட்சீட்டை இழுத்து போர்த்தியபடியே கூற,

" எனக்கென்னப்பா.. நீ நல்லா தூங்கு.. அங்க உன்னோட தம்பி ஒருத்தன் ' உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு.. உங்க டிரெஸ் நல்லா இருக்குனு.. ' அவங்க கிட்ட மொக்கைப் போட்டுட்டு இருக்கான். நீ என்னடானா இப்படித் தூங்கற,.. போறப் போக்கப் பார்த்தா மீரா அண்ணிய அவன் தான் கரெக்ட் பண்ணுவான் போல.. நீ நல்லா ரெஸ்ட் எடு ராசா. ரெஸ்ட் எடு " என்று புலம்பிக் கொண்டே வெளியே சென்ற தங்கையின் கூற்று காதில் விழ,

" அப்போ என் கனவு பழிச்சிடுச்சா " என்று உரக்க கூறயவாரே வெளியே எட்டிப் பார்த்தான்.
அங்கே மீரா அவனுடைய தந்தை மற்றும் தாத்தாவுடன் எதையோ பேசிக் கொண்டிருக்க, ஆனந்த் அவளது அருகே அமர்ந்திருந்தான்..

அவளது திடீர் வருகைக்கான காரணத்தை ஆராய்ந்தவன் ' அடிப்பாவி.. ஒரு பேச்சுக்கு அப்பானா பயம்னு சொன்னேன்.. உடனே பத்த வைக்க வந்துட்டாளே.. ஐயோ கீழ என்னைப் பத்தி என்னைப் பத்தி என்ன சொல்றானு தெரியலையே ' என புலம்பியவன் வேகமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டான் ..

ஒரு வேகத்தில் கிருஷைப் பற்றி அவர்கள் வீட்டில் சொல்லி அவனைக் கொஞ்சம் கண்டிக்க சொல்லலாம் என கிளம்பி வந்து விட்டாலும் அதை அவர்களிடம் எவ்வாறு கூறுவது எனத் தயங்கிக் கொண்டிருந்தாள் மீரா.. இதையறியாத கிருஷுன் குடும்பமோ அவள் கிருஷின் காதலியாகத் தான் இங்கே வந்திருக்கிறாள் என நினைத்துக் கொண்டிருந்தனர்..

முள்ளும் மலரும் (முடிவுற்றது)Where stories live. Discover now