👨 என் வாழ்வின் லட்சியம் 👩

41 11 15
                                    

உந்தன் கண்களை மட்டுமே

நேருக்கு நேர் எதிர்கொண்ட எனக்கு,

மற்ற விழிகளை எதிர்கொள்ள

இயலாமல் போனதடி...!!!

எந்த விழிகளும்

உந்தன் விழிகளாகவே தோன்றுதடி

எதிர் கொள்கையிலே...!!!

உந்தன் முகம் மட்டுமே

விடியலிலும் உறங்குகையிலும்

கண்டுவந்த எந்தன் மனம்,

வேறொரு முகம் காண

மறுக்கின்றதடி...!!!

உன் ஓரவிழி பார்வையில்

வீழ்ந்த என்னால்

வேறெந்த விழிகளாலும்

வீழ இயலவில்லையடா...!!!

உன்னுடன் வாழ்வதாக

கற்பனை கொண்டே

வாழ்ந்த என்னால்,

வேறொரு பெண்ணுடன்

நிஜத்தினிலும் வாழ

இயலாதடா...!!!

மனம் என்ற ஒன்று என்னிடம்

இல்லாமலே இருந்திருக்கலாம்,

அந்த மனதிலே நான் இன்றுவரை

துடிதுடித்து கொண்டே இருக்கிறேன்

வலிகளால்...!!!

உன்னை அடைவது

எந்தன் விருப்பம் அல்லவே,

ஆனால் உந்தன்

அன்பை அடைவது தான்

எந்தன் லட்சியம்...!!!

நாம் நிஜத்தினிலே சேர இயலாது,

மறு ஜென்மத்திலாவது

சேர வேண்டுமடி...!!!

என் உணர்வுகளின் நிழல் (*.*)Where stories live. Discover now