ஸ்தம்பிதம்

68 15 22
                                    

சில நேரங்களில் சில நொடிகள் ஸ்தம்பித்தால் என்ன என்று எண்ண கூடும்...

மழை துளி மேனியில் விழும் நொடி...

வாடை காற்று கூந்தலை தள்ளி செல்லும் நேரம்...

மண் மணம் நாசியை தீண்டும் பொழுதுகள்...

கார்காலத்து கதகதப்பான காலை சூரிய ஒளியின் வெப்பம்...

பாதங்கள் ஆற்று நீரில் நனைய மீன்கள் கொத்தி விளையாடும் நாழிகை...

புல்வெளியே மஞ்சமாய் விண்மீன்களை இரசிக்கும் நிமிடங்கள்...

பஞ்சு மேகங்கள் சூழ பொழுது புலரா விடியலில் புள்ளினத்தின் கானங்கள்...

அலைகடலும் ஆர்பரிக்க தொடுவானத்தை தொட்டு விட்டு வரும் கண்கள்...

இன்னும் யுகம் யுகமாய் சுகிக்க தோன்றும் நிமிடங்கள் பல... எழுத்தில் அடங்கா...

பின் குறிப்பு: தனிமையிலும் இனிமை காண முடியுமா... முடியும்... 😎

போர் அடிச்சா படிங்கWhere stories live. Discover now