காதல் 21

704 15 1
                                    





பின் கல்யாண வேளைகள் மும்முரமாக நடக்க.. விநாயகம் உடலும் தெரியது....

தன் கண் முன் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் நடக்க... இது அனைத்தும் ஜீவாவிற்கு முள்ளில் நடப்பது போன்ற துயரத்தை கொடுத்தது...

அவனுக்கு இந்த திருமணம் இஷ்டம் இல்லை என்பது அவனின் முகத்தில் அப்படமாக தெரிய...அதை கண்டும் காணாதது போல் இருந்தார் லட்சுமி...

மதுவை தேடி சென்ற இருவரிடமும் தகவல் எதுவுமே வராமல் போக... இரண்டு நாட்கள் காத்திருந்தவன்... அதற்கு மேல் பொறுக்க முடியாமல்..அவனே அவர்களுக்கு அழைக்க...

மது வீட்டினர் வீட்டை காலி செய்து கொண்டு வேறு எங்கேயோ இடம் பெயர்ந்தது விட்டதாக அக்கம் பக்கம் வீட்டினர் தெரிவிக்க... மது கிடைப்பாள் என்று இருந்த ஒரு சிறு எதிர் பார்ப்பும் இத்துடன் முடிந்தது....

பின் திருமண நாளும் நெருங்க... இன்று இங்கு மணமகனாய் அமர்ந்திருக்கிறான் ஜீவா... மனம் முழுதும் மதுவின் நினைவுகள் அவை வதைத்து கொண்டு இருக்க....

நேரம் நெருங்க... மணப்பெண்ணை மேடைக்கு அழைத்தார் ஐயர்....

பச்சை நீலம் கலந்த நிறத்தில் பட்டு உடுத்தி... அதற்கேட்ர அலங்காரங்களுடன் அழகாய் அன்ன நடை போட்டு மேடைக்கு வந்தாள் மலர்

மலர் -ஜீவாவின் மாமன் மகள்

மேடையின் ஜீவாவுடன் அவள் அமர... அவளை ஒரு முறை கூட காண வேண்டும் என்ற எண்ணம் ஜீவாவிற்கு வரவே இல்லை... அவனின் மனமும் நினைவும் மது அல்லவா நிறைந்து இருந்தால்....

மலர் வந்து அமர்ந்தது கூட அவன் அறியாமல் அமர்ந்திருந்தான்....

அவன் தன்னை காண்பான் என்று மலர் ஏக்கத்துடன் அவனை பார்க்க... அவனோ தன் சொந்த நினைவுகளில் உறைந்திருந்தான்....

மேடையில் வந்து அமர்ந்து இத்துடன் பத்து தடவைஏனும் அவனை மது பார்த்திருக்க... ஜீவா அவளை பொருட்படுத்தாது அமர்ந்திருந்தான்....

ஜீவாவோ எதையோ இழந்து... முகம் வாடி போய்... மனம் முழுவதும் குழப்பத்துடன் அமர்ந்து இருக்க....

மலரோ... மன பெண்ணிற்கு உண்டான கலையும்... முகத்தில் எப்போதும் இருக்கும் பூரிபை விட... அவள் முகத்தில் எதோ இன்று முகுதியாய் தெரிய...மனம் முழுதும் தன் மன வாழ்வின் கனவுகளுடன் உற்சாகமாய் அமர்ந்திருந்தாள்....

ஜீவா யாரும் யோசிக்கும் ஒரு நொடியில் கோவத்துடான் எழுந்து மலையை தூக்கி எரிந்து தன் மன பாரத்தை அனைவரிடமும் கூறிட....

ஐயரின் குரல் அவனை நினைவிற்கு கொண்டு வர... நல்ல வேலை... அவ்வாறு தான் எதுவுமே செய்யவில்லை.......

அன்றாடம் நூறுவகை பூப்பூக்கும்
ஆனாலும் காயாகும் சில பூக்கள் தான்

 எல்லோர்க்கும் காதல் வரும் என்றாலும்
கல்யாண வைபோகம் சில பேர்க்கு தான்

 காதலன் காதலி தோற்பதுண்டு
காதல்கள் எப்போதும் தோற்பதில்லை

 ஒர்மனம் ஒருவரை ஏற்பதுண்டு
இன்னொரு உறவினை ஏற்பதில்லை

தன் தந்தையின் முகமும்.. மணவறை வரை வந்த மலரின் நினைவும் வர.... எந்த அனத்தமும் நேராதது நினைத்து நிம்மதி அடைந்தான்.....

திருமணம் முடிந்ததும் தன் மனதில் இருக்கும் எண்ணத்தை மலரிடம் கூறி... அவளுக்கு நல்ல வாழ்வு அமைத்து தர வேண்டும் என்று நினைத்து கொண்டான்.....

கேட்டிமேளம்..... கேட்டிமேளம்...ஐயர் தாலி கொடியை எடுத்து கொடுக்க... கை முழுதும் உத்தரல்களுடன்... அதை வாங்கும் எண்ணமே இன்றி அமர்ந்திருந்தான்.....

பலம் பொருந்திய அந்த முரடனின் கைகள் இன்று பலம் இழந்து கிடக்க... உதரளுடன் அதை கையில் வாங்கினான் ஜீவா.... இதை அனைத்தையும் மலரும் லக்ஷ்மியும் கவனிக்க தவறவில்லை......

தாலி கொடியை வாங்கியவன்... அதை மலரின் கழுத்திற்கு அருகில் கொண்டு செல்ல... கை அதிகமாக உதர..ஒரு கொடியை பற்றி இருந்த தாலி கொடி அவனையும் அறியாமல் கீழே விழ போக....

உடனே அந்த கொடியை பற்றி அதை ஜீவாவின் கையில் கொடுத்து.... இரண்டையும் தன் கையுடன் ஒரு சேர பற்றினாள் மலர்..

இது தான் காதல் என்பதா..!!!!??Where stories live. Discover now