காதல் 33

635 9 0
                                    


மொட்டை மடியின் நிலவு துணைக்கு இருக்க... அங்கு நின்று கொண்டு இன்று வினோத் அறையில் இருந்து கடிதத்தை எடுத்தவன்...அதை வாசிக்க ஆரம்பித்தான்...

அன்புள்ள மலருக்கு.... வினோத் எழுதுவது....

இந்த கடிதம் உனக்கு கிடைக்கும் போது நான் நிச்சயம் உயிருடன் இருக்க மாட்டேன்...ஏனா இப்போ தான் விஷம் கலந்த சாப்டா சாப்பிட்டோம்... உங்க அண்ணியும் இருக்க மாட்டா....நமக்கு ரொம்ப நெருக்கமான நம்பிக்கைக்குரிய ஒருத்தர் எது சொன்னாலும்
குடுத்தாலும் நம்பிடுவோம் மலர்....

அப்டி நம்பி தான் இன்னைக்கு எங்களோட வாழ்க்கையோட கடைசி நிமிஷன்களை வாழ்ந்துட்டு இருக்கோம்.....

ஒரு அண்ணனா உனக்கு நான் சொல்றது யாரையும் நம்பிடாத... அது யாராக இருந்தாலும் சரி....

என்னோட உயிர் தான் வேணும்னு கேட்டு இருந்தா என்னைக்கோ குடுத்து இருப்பேன்... என் உயிரை விட ரொம்பவும் நேசிக்குற ஒருத்தர் இப்டி முதுகுல குத்துவாங்கனு நான் நினைக்கல.....

யாருனு கேக்குறிய மலர்.... நீயும் தெரிஞ்சிக்கோ உனக்கு இந்த ஏமாற்றம் இல்லாம போகும்....

ஆனால் உன்னால் சொன்னாலும் தாங்க முடியாது மலர்..... வேண்டாம்....
நீ ஜீவாவையே கல்யாணம் பணிக்கோ மலர்.... அவர் மட்டும் தான் உன்னை இந்த உண்மைகளில் இருந்து காப்பாற்ற முடியும்.... இந்த வீட்ட விட்டு போய்டு மலர்....

நானும் போறேடா குட்டி... என் பொண்ண பத்தின கவலை இல்லை எனக்கு... நீ பத்துப்ப...

உன்ன பாத்துக்க ஒருத்தரை விட்டுட்டு போகாம நான் மட்டும் போறேன் குட்டி...

பத்திரமா இருந்துக்கோ... எந்த பிரெச்சனையாக இருந்தாலும் இந்த வீட்டுக்கு வந்துடாத.... அத்தை வீட்டுக்கு போய்டு...
                              நான் போறே குட்டி.....

இதை படித்தவனுக்கு முதன் முறையாக வினோத்தை கட்டி தழுவி கொண்டு உங்களுக்கு  நான் இருக்கே மச்சான்னு சொல்லணும் போல இருந்துது.... ஆனால் காலம் கடந்த பின் என்ன பணியும் பயன் இல்லை....

இது தான் காதல் என்பதா..!!!!??Donde viven las historias. Descúbrelo ahora