நிரலி-7

912 57 141
                                    

மருத்துவமனையில் இருந்து வந்தவளுக்கு கரு கலைந்தது ஒரு பக்கம் துயரமாக இருந்தாலும் ஒரு கொடூரன் கொடுமை படுத்தி உருவான கரு அவன் கையாலே அழிந்து போனதில் சிறு நிம்மதி தான் நாளை இவனா எனக்கு தகப்பன் இவன் கூட எப்படிம்மா நீ வாழ்ந்த என்ற கேள்வி தன் பிள்ளை எழுப்பாது என நினைத்து உள்ளுக்குள் வலி இருந்தாலும் அதை மறைத்து கொண்டு ஒரு நடைப்பிணமாக இருந்தால்......

டேய் எதுக்குடா அப்படி பண்ண.. பின்ன என்னமா பண்ண சொல்ற அவளுக்கு எவளோ நெஞ்சழுத்தம் எவன் புள்ளைக்கோ என்னைய அப்பனா ஆக்கப்போறேன்னு சொல்றா அதன் அதையே அழுச்சுட்டேன்.. என திமிராய் கூறியவன்.. அங்கு அவர்களுக்குள் நடந்த விடயத்தை கூற...

அடப்பாவி இப்படி தினமும் ஒருத்தி கூட சுத்துரணு தானே கல்யாணம் முடுச்சு வச்சா ஒழுங்கா இருப்பனு நெனச்சேன் திரும்பவும் ஏன்டா அதுவும் ஊருக்குளே சுத்திகிட்டு இருக்க.. நாயே நாயே அவ உன்னை கோபப்படுத்துறதுக்காக அப்படி சொல்லிருக்காடா அவ வயித்துல இருந்தது உன் பிள்ளை தான்... அவ திமுருபுடுச்சவ தான் ஆனால் ஒழுக்கம் கெட்டவ இல்லை அது எனக்கு நல்லா தெரியும்...

இனி ஒருமுறை இப்படி அவ கிட்ட நடந்துக்காத.. அப்பறம் வரவேண்டிய சொத்து வராம போய்டும்.. பாத்து நடந்துக்கோ... என்னமா அதுக்காக அவகிட்ட என்னை அடிமையா வாழ சொல்றியா.. டேய் அறிவு பேதழுச்சு போனவனே உன்னை அடிமையா வாழ சொல்லல அவ வாயை அடக்கி வாழு.. அவ அவங்க வீட்ல வாயை திறந்தாள் உன் சொகுசு வாழ்க்கை போச்சு பார்த்துக்கோ...

காலங்கள் அதன் போக்கில் நகர நிரலி புகுந்த வீடு செல்வதையே தவிர்த்து வந்தால்.. காலேஜ் லீவ் என்றால் கூட வீட்டுக்கு வருவதை வெகுவாய் குறைத்து கொண்டாள்.. தவிர்க்க முடியா விடுமுறை மட்டும் வீடு வருவாள்... அப்போதும் வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்துவிட்டு விடுமுறை முடிந்ததும் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி சென்றிடுவாள்..

இதுபோல் இரண்டு வருடம் தொடர... ஊரே திரும்பி பார்க்கும் அளவு பேசி சிரித்து கொண்டிருந்த நிரலியின் சத்தம் நாளடைவில் அந்த நான்கு சுவரிற்குள் கேட்பதே அரிதாய் மாறிப்போனது.. தங்கை வேண்டுமென்றே அவளை வம்பு வளர்க்க வந்தாலும் வாஞ்சையை அவள் தலையை தடவிட்டு சிறு புன்னகை சிந்திவிட்டு சென்றிடுவாள்..

நிரலி (நிறைவுற்றது)... Onde as histórias ganham vida. Descobre agora