நிரலி-9

888 60 63
                                    

அம்மா இனி  இதைப்பத்தி ஒன்னும்  பேசவேண்டாம்.. என் வாழ்க்கை நல்லா தான் இருக்கு என்னை பத்தி கவலை இங்கு யாரும் படவேண்டாம் என கூறி தன் தந்தையை அழுத்த பார்த்தவள்... இனி பேசுவதற்கொன்றும் இல்லையென எழப்போக..

நிரலி உக்காரு அப்பா பேசிட்டு இருக்காங்க நீ பாட்டுக்கும் எழுந்தா என்ன அர்த்தம்..

என்னமா பேச சொல்றிங்க..

அப்பா ஏதேதோ பேசுறாங்க நீ ஒன்னும் இல்லைனு சொல்ற கைல வச்சுருக்க டைரி என்ன இங்க கொடு அதை..

அம்மா இப்போ எதுக்கு இதை இழுக்குற டைரியை விடு.. எனக்குத்தான் ஒன்னுமில்லன்னு சொல்றேன்ல என்ன உங்க ரெண்டு பேருக்கும் நான் வீட்டுக்கு வரது புடிக்கலையா   அப்படி இருந்தால் சொல்லுங்க இனி இங்க வரலை..

என்னடா இப்படி பேசுற என்னடா ஆச்சு உனக்கு .. அப்பா தெரியாம ஏதோ யோசிக்காம பண்ணிட்டாரு ஆனால் அதுக்காக நீயும் இப்படி பிடிவாதமா இருந்தால் என்ன அர்த்தம்..

அம்மா தெரியாம பன்னிட்டாங்கனு சொல்ற.. ஏதோ குழந்தைங்க விளையாடும் போது அடுச்சுக்கிட்டு சமாதானம் செய்றது மாதிரி.. அது என் வாழ்க்கைமா.. அது அப்டியே மண்ணா போச்சுமா உங்க யாருக்குமே அது புரியலையா...

நானும் மனுசி தான்மா எனக்கும் ஆசை, கனவு இப்படி தான் ஒரு வாழ்க்கை வாழனும் இப்படித்தான் என் வருங்கால கணவன் இருக்கனும் இப்படி எல்லா கனவும் கொண்ட ஒரு சாதாரண பொண்ணு தான்மா... அதுலயும் எல்லா பொண்ணுக போல அப்பாதான் உயிரு அப்பா எது செய்தாலும் நல்லது மட்டும் தாணு கண்மூடி தனமா நம்பிக்கை வச்சு என் மொத்த வாழ்க்கையும் அவரு கைல கொடுத்தேன்... அன்னைக்கு அப்பா சொன்னார்களே இந்த கல்யாணம் நடக்கலைனா செத்துடுவேன்னு அப்போ  எனக்கு எவளோ நேரம் ஆகியிருக்கும் கல்யாணம் நடந்தா நான் செத்துடுவேன்னு சொல்ல... ஆனால் எனக்கு அவங்கள வார்த்தையால கூட நோகடிக்க முடியாம அமைதியா எல்லாத்துக்கும் சரினு சொன்னேன்..

வெறும் வார்த்தைக்கு தான்மா சொல்லலாம் கல்யாண வாழ்க்கைக்கு வயசோ,  படிப்போ,   தேவையில்லை நல்ல மனசு ஒத்துபோய் குடும்பம் நடத்தினால் போதும்னு ஆனால் இங்க அப்படி இல்லை...

நிரலி (நிறைவுற்றது)... Where stories live. Discover now