பாகம் 1

302 13 8
                                    

🌈என் தூரிகா நீயடா 🌈

part 1.

    முல்லை ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள். தாய் ,தந்தை மற்றும் ஒரு அண்ணனுக்கு தங்கையாக செல்லமாக வளர்ப்பவள்.

   முல்லை சிறு வயது முதலே கவிதைகளை வாசிப்பதில் மிகவும் ஆர்வம் அதிகம் அதில் தொடர்ந்து கவிதை ,கட்டுரை, கதைகள் என்று தொடர ஆரம்பித்தது.

கடந்த சில வருடங்களாக கவிஞர் ஒருவரின் கவிதைகள் அவளை மிகவும் கவர்ந்திருந்தது அதன் விளைவாக அவரைப் பற்றிய தேடல்களை துவங்க ஆரம்பித்திருந்தால். அவரது ஒவ்வொரு படைப்புகளிலும் பின் தொடர்ந்தவள் பின் அவரது இயல்புகளை ரசிக்கத் தொடங்கி விட நாளுக்கு நாள் அவரது புது புது செயல்கள், துணுக்குகளை அறிந்திட ஆவலை கூட்டியது. அவர் மீது அன்பையும் மரியாதையையும் ஏற்படுத்தியது.

நாட்கள் இவ்வாறு ஒரு புறம் ஓடிக்கொண்டிருக்க முல்லைக்கு மேல் படிப்பை தொடர கல்லூரியில் அழைப்பு வந்தது. தான் எதிர்பார்த்து காத்திருந்த வருகை விண்ணப்பத்திற்கு அழைப்பு வந்ததை  நினைத்து தன் குடும்பத்தாருடன் சேர்ந்து பெருமகிழ்ச்சி அடைந்தால்.

தனது தந்தையும் அண்ணனும் அவள் மேல் படிப்பிற்கு கல்லூரிக்கு செல்ல வேண்டிய ஏற்பாடுகளை பார்க்க. முல்லை ஒரு வாரம் கடந்து தனது கல்லூரி விடுதியில் சேர்ந்தாள். முல்லை கல்லூரியிலும், விடுதியிலும் சற்று மெதுவாகவே தன் இயல்புக்குள் கலந்துகொள்ள முயற்சித்து ஒரு தோழியுடன் இணைந்து கொண்டாள். (நித்யா)

இவ்வாறு கல்லூரி வாழ்க்கை முல்லைக்கு புதுப்புது அனுபவங்களை தர அதன் பின் ஓடிக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது அவளது நினைவுகளில் இனிக்க தவறவில்லை அந்தக் கவிஞர். அப்பப்போ அவரது கவிதைகளையும் கற்பனைகளையும் ரசித்தபடியே நகர்ந்து விடுவதையே வாடிக்கையாய் செய்து கொண்டிருந்தாள்.

ஒரு நாள் அவளது கல்லூரியில் கவிதை படைப்பாளர்களை அங்கீகரிக்கும் வகையில் ஒரு நிகழ்வு நடத்த கல்லூரியின் தலைமை குழுவால் ஏற்பாடு செய்யப்பட. இதை தன் தோழி நித்தியா மூலம் அறிந்து கொண்ட முல்லை இதில் தான் பின் தொடரும் கவிஞரின் புதுக்கவிதை புத்தகம் ஏதும் கிடைக்குமோ என்ற ஆவல் பிறந்திட நாளைய விடியலுக்காக ஆர்வத்துடன் காத்திருந்தாள்.

🌈என் தூரிகா நீயடா 🌈Where stories live. Discover now