பாகம் 10

94 10 4
                                    

🌈 என் தூரிகா நீயடா 🌈

part 10 ...

அன்று எதற்கு நீ வந்தாய். எதற்கு அதை படித்தாய், அப்படி அதில் என்ன படித்தாய்.. ஏன் என்னை விட்டு சென்றாய்... என பல பதில் இல்லா கேள்விகளை தன்னுள் கேட்டுக்கொள்ள....

பைத்தியமாடி நீ என  அவர் மனம் நினைத்தது...

அவள் அழுகை ,,அவள் சிரிப்பு ,,அவள் கோபம் அவள் வீம்பு ,,அவள் குறும்பு,, என்ன விட்டுப் போகாதன்னு ஒரு நாள் அவள் தன்னை கட்டிக்கொண்டு அழுத அந்த அருகாமை என மொத்தத்திற்கும் அவர் ஆண்மை ஏங்கியது.

அவளது வாசம் அவரை சுற்றியே இருப்பதாக உணர்ந்தார் கதிர் அது வெறும் பிரம்மை என நினைத்திருந்தவருக்கு அவளது குரல் கேட்டது.

கதிர்... என அவள் தன் பின்னால் நிற்பதை பார்த்ததும் பகல் பறந்தோடி மாலை வந்துவிட்டதை அப்போதுதான் உணர்ந்தார்.

அவரால் தன் உள்ளிருந்த நினைவுகளை தாங்கி அப்போது அவள் முகத்தைப் பார்த்து எதுவும் பேச முடியவில்லை.

அவள் முகம் பார்க்காமல் சற்று தள்ளி அமர்ந்தார்.

எப்போ வந்தீங்க கதிர்...

இப்போதான் என தடுமாறினார்..

இங்க எவ்வளவு நாள் இருப்பீங்க என்றால்...

கிளம்பி இருக்கணும் உன்ன பாக்கணும்னு தான் இருந்தேன் என்றார் உண்மையை மறைக்காமல்.

அப்படியா... என்ற அவளிடம்,

ஆமா... நீ இங்க வருவன்னு தான் வெயிட் பண்ணேன் என்றார்.

கதிர்... நல்லவேளை... நான் இன்னைக்கு வர வேணாம்னு யோசிச்சேன் லைட்டா உடம்பு சரியில்லை என்றால்.

என்னாச்சு எப்போதும் அவள் இப்படி சொன்னால் அவரிடம் இருக்கும் பதற்றம் இல்லாமல்.

ஃபீவர் வர மாதிரி இருக்கு...

எதுவும் யோசிக்காமல் அவள் கழுத்தை தொட்டுப் பார்த்து நார்மலா தான் இருக்கு என்றார்.

அதைத்தொடர்ந்து பசிக்குது சாப்பிடுவோமா என அவள் கூறியதும்...

🌈என் தூரிகா நீயடா 🌈On viuen les histories. Descobreix ara