4 வெறுப்பு வேதாந்தி

325 38 3
                                    

4 வெறுப்பு வேதாந்தி

காலை முதல் கொண்டே மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டான் அர்னவ். இன்று குஷி வர போகிறாள். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவள் அவன் வீட்டுக்கு வந்துவிடலாம்...! சில நிமிடத்திற்கு முன்பு தான் அரவிந்தன் ரத்னாவுக்கு ஃபோன் செய்து, அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்து விட்டதாக கூறினார். அவர்கள் வீடு வந்து சேர அதிக நேரம் பிடிக்காது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் போக்குவரத்து நெரிசல் இருக்காது.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு,

கார் ஹாரன் சத்தம் கேட்ட அர்னவ், தனது அறையில் இருந்த சாளரத்தின் திரைசீலையை லேசாய் விலக்கி, வெளியே எட்டிப் பார்த்தான். அரவிந்தன் காரை விட்டு கீழே இறங்கினார். அவரை பின்தொடர்ந்து, ஷஷியும், கரிமாவும் இறங்கினார்கள். அவர்கள் கொஞ்சம் கூட மாறவே இல்லை. மிகவும் ஸ்மார்ட் ஆக இருந்தார் ஷஷி. அவர் இந்திய கடற்படையின் அதிகாரி ஆயிற்றே...! கரிமா முன்பு இருந்ததைவிட ஸ்டைலாக இருந்தார். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வேகமாய் அவனது இதயம் துடித்தது, அரவிந்தன் காரின் பின் கதவை திறந்த போது. "யூ" கட் செய்யப்பட்டு, விரித்து விடப்பட்ட கூந்தலுடன் ஒரு பெண் காரை விட்டு இறங்கினாள். அவ்வளவு நேரம் தாறுமாறாய் துடித்துக் கொண்டிருந்த அவனது இதயம், சில நொடிகள் துடிக்க மறந்தது. அவள் மீதிருந்து விழிகளை அகற்ற முடியாத அளவிற்கு அழகாய் இருந்தாள் குஷி.

அப்பொழுது ரத்னா அவனை கீழே வரச் சொல்லி அழைப்பதை கேட்டான் அர்னவ். நீண்ட மூச்சை இழுத்து விட்டு தரைதளம் சென்றான்.

அவர்களது பேச்சு இயல்பாய் ஹிந்தியில் துவங்கியது.

"என் பொம்மை செல்லம் எப்படி இருக்கு?" என்றார் ரத்னா குஷியை பார்த்து சந்தோஷமாய்.

"உங்களை பார்க்காம பேட்டரி இல்லாத பொம்மையா இருந்தது. இப்போ உங்கள பார்த்த பிறகு சார்ஜ் ஏறிடுச்சு" என்று சிரித்தாள் குஷி.

"ஹாய் குஷி" என்றான் நந்து கிஷோர்.

"ஹாய், ஃபோட்டோஸ்ல இருந்ததைவிட நேர்ல ஸ்மார்ட்டா இருக்க" என்றாள் தன் கையை அவனை நோக்கி நீட்டியபடி.

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!Where stories live. Discover now