Chapter 11 of 16

27 2 0
                                    

ஆசிரமத்தை ஒட்டியிருந்த நடைமேடையில் திரும்பவும் சாலையைப் பார்த்து இருவரும் உட்கார்ந்து கொண்டோம். சாதாரணமாக, ஆத்மஞான செயல்விளக்க அனுபவமே பலருக்கும் புரிந்துகொள்ள முடியாத ஓர் ஆன்மீக நிகழ்வு. அதன் பின் இருக்கும் ஆன்மீக அறிவியலைப் புரிந்துகொள்வது என்பது, மிக மிகக் கடினமானது. இருந்தாலும், அனிதா அதீத புத்திகூர்மையுடன் வலது மூளையைப் பயன்படுத்தி சிந்திக்கும் திறமை வாய்ந்தவள் என்பதால் நான் விளக்க முடிவுசெய்தேன்.

"ஒரு கார்ட்போர்டு அட்டைய எடுத்துக்கிட்டு, அதுக்கு மேல கொஞ்சம் சின்னச் சின்ன ஆணிகளப் போட்டுட்டு, அதுக்குக் கீழ இருந்து ஒரு காந்தத்த மூவ் பண்ணுனோம்னா, மேல இருக்கற ஆணிகளும் நகருமில்லையா?"

அனிதா கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

"எப்படி கீழ இருக்கற காந்தம் நகரும்போது மேல இருக்கற ஆணி எல்லாம் நகருது? மேல இருக்கற அந்த ஆணிகளையும் கீழ இருக்கற காந்தத்தையும் லிங்க் பண்றது எது?"

"காந்தப்புலம்."

"ம். அதே மாதிரி, நம்ம உடல் ஆணி, உயிர்த்தன்மையோட இருக்கிறதுக்குக் காரணம், நம்ம ஆத்மா காந்தத்தோட கான்ஷஸ்னஸ் புலம்."

"இப்ப நான் சொல்றேன். நம்ம ஆத்மாவோட கான்ஷஸ்னஸ் புலம் இல்லேன்னா, நம்ம உடல், ஆணி மாதிரி உயிரில்லாத ஜடம்."

"எக்ஸாக்ட்லி."

"மேல சொல்லுங்க, அங்கிள்."

"இப்ப, இன்னொரு உதாரணம். ஒரு ஓபன் வெசல ஸ்டவ் மேல வச்சு, பால் காச்சிட்ருக்க."

"ஓகே."

"பால் கொதிக்க ஆரம்பிச்சிடுச்சு."

"ஓகே."

"இப்ப கேஸ கட் பண்ணிட்டேனா என்ன நடக்கும்?"

"பால் கொதிக்கிறது நின்னுடும்."

"நம்ம உடல்ல இருந்து ஆத்மா கேஸ பிரிச்சிட்டோம்னா, நம்ம உடல்ல கொதிச்சிட்டிருக்கிற கோபப் பால் அமைதியாயிடும்."

"புரிஞ்சது. நம்ம மனசுலேர்ந்து நம்ம ஆத்மா கேஸ எடுத்துட்டோம்னா, நம்ம மனசுல கொதிச்சிட்டிருக்கிற பயப் பால் அமைதியாயிடும்."

Despair to Hope (Tamil Version)Where stories live. Discover now