05 நீ... நான்...

3.2K 132 40
                                    

காலை கதிர்களின் கோப இரேகைகள் முகத்தில் படர்ந்திட... எரிச்சல் கொடுத்து கொண்டிருந்த இமைகளை பிரித்தவனின் கண்களிரண்டும் சிவந்திருக்க.... இரவெல்லாம் உறங்காமல் விடிய காலையிலே படுக்கையை விட்டு எழுந்தான் ஆதித்... அவனை சுற்றி நோக்கிவனுக்கு... இரவு நிகழ்ந்த அனைத்தும் கண் முன் காட்சியாய் வந்து சென்றது...

கணினிக்குள் மூழ்கி கிடந்த ஆதித்தின் தலைவலி முன்பிருந்ததை விட பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே போக... அதை தாங்க இயலாமலும்... எங்கு வேலையை மூடி வைத்தால் அவள் நினைவு வந்து விடுமோ என்ற எண்ணத்திலும்... முன்பே அவள் நினைவு வந்து விட்டதை அறியாமல் கணினியில் மூழ்கியவனுக்கு.... கண்கள் மெல்ல மெல்ல சிவக்க தொடங்க... அவனையும் அறியாது... அவனை சுற்றி வந்தது...." ஆதன் " என்னும் அதே அழைப்பு.... தலைவலி மெல்ல மெல்ல குறைய ... அவ்வழைப்பு மெல்ல எகிரியது.... அதை கேட்க. விரும்பாதவன்..... கணினிக்குள் மூழ்கி ஏதேதோ செய்து பார்த்தான்.... அனைத்தும் வீணாக..... கோவத்தை அடக்க இயலாதவன்.... அவன் முன் வீம்பு செய்து கொண்டிருந்த கணினியை தூக்கி மடாரென கீழே போட்டு உடைத்தான்....

தீரா : ஏன் டா இப்போ அத போட்டு உடைக்கிற....

ஆதித் : எல்லாம் உன்னால தான்...

தீரா : நா என்னடா பன்னேன்...😳😳

ஆதித் : நடந்த ஆக்சிடென்ட்ல எனக்கு மெமரி லாஸ் ஆக வக்காம என்னடி பன்னி தொலச்ச... மத்த யாரும் நினைவுல வர மாற்றாங்க.... ஆனா... அது... வந்து வந்து வந்து வந்து...

தீரா : எத்தன வந்து...

ஆதித் : நீ மூடு... இத்தன முறை வந்து என் உயிர வாங்குது...

தீரா : நீ சென்னை போனா அது ஏன் உன் உயிர வாங்க போகுது...

ஆதித் : அங்க போகக்கூடாதுன்னு எனக்கு மட்டும் ஆசையா... ஆனா அங்க போனா...

தீரா : அங்க போனா...

ஆதித் : என்ன அதே இடத்துக்கு அனுப்புவாங்க... நா மறக்க நினைக்கிற எல்லா விஷயமும் நியாபகத்துல வரும்...

நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now