21 நீ... நான்...

2.2K 116 76
                                    

ரம்பம் போல் அறுத்திடும் மனவலியே...
அர்த்தம் புலப்பட செய்வாயா...
மூளை திறன்தான் வையகத்தை அளவிட்டாலும்...
இரு மனங்களின் இடையே
இருந்திடும் உணர்வறிய தோனாமலிருப்பதற்கு
நீ செய்த மாயம் தான் காரணமா...
அல்ல...
என்னாலே என்னை அறியாமல்
அவன் மனதில் ஏற்பட்ட காயத்தின் வீரியமா....

ஓடோடி வந்த தோழியை கண்ட மிருவும் அன்கியும் முகத்தை திருப்ப... மண்டையை சொரிந்த உத்ரா... காலில் விழாத குறையாக அவள்களிடம் கெஞ்ச கொஞ்ச... எதற்கும் மசியாதவள்கள்... அவளின் " மாங்கா எனக்கு மட்டும் தான் "என கூறியதிலே... சரண்டராகினர்....

அதன் பின் அன்கியும் மிருவும் அவளை பொரட்டி எடுத்து விட்டனர்... அதன் பின்... அங்கிருந்து மூவருமாய் தியாவை காண பெரிய வீட்டிற்கு நடையை தொடங்கினர்...

காலையில் அறையில் நுழைந்த மகன் இன்னும் வெளியேறாததை உணர்ந்து கவலை பட்ட தாய் மனம்... எவ்வளவு நேரம் தான் பொருக்கும்... எது நடந்தாலும் நடக்கட்டுமென.... ஆதித்தின் அறைகதவை தள்ளினார்... அறை தானாய் திறந்து கொண்டது...

பால்கெனியில் நின்று உச்சியிலிருந்த சூரியனை.... " நீ ரொம்ப நேரம் என்ன பாக்குரியா... இல்ல நா உன்ன ரொம்ப நேரம் பாக்குறனான்னு பாத்துடுவோம் " என்பதை தொப்பலாய் நனந்தை உடையுடன் போல் அதை வெரித்து கொண்டிருந்தான்.... எவ்வளவு நேரம் ஷவரின் கீழிருந்தானோ தெரியவில்லை... அப்படியே வந்து வெளியேவும் நின்றிருக்கிறான்....

அவனருகில் சென்ற அம்ருதா அவன் தோளில் கை வைக்க... மெல்ல திரும்பியவன்... காலையில் எப்படி வந்தானோ... அப்படியே தான் இருந்தான்.... அதை கண்டு அதிர்ந்தவர்... அவனின் சிவந்த கண்கள்.... அவனின் கோவத்தையும்... எவரிடமோ சத்தியாகமாக சண்டை போட்டு விட்டு தான் வந்திருக்கிறான் என்பதையும் அடித்து கூறியது....

அம்ருதா : என்ன கண்ணா ஆச்சு... என மெதுவாய் கேட்க...

ஆதித் : ஏன் மா எனக்கு மட்டும் எல்லாம் சோதனையாவே இருக்கு... இதுக்காக தான் நான் பொறந்தேனா... எனக்குன்னு யாருமே எப்பவும் இருக்க மாட்டாங்களா.... என இவன் பிறந்த இந்த 26 வருடத்தில் அவர் கண்டிராத அந்த ஏதோ ஒரு ஏக்கத்தை கண்களில் அவனறியாமல் ஒளிரவிட்டு கேட்டான்... அதை கண்டவரின் தாயுள்ளம் பதறியது....

நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now