13 நீ... நான்...

2.4K 148 87
                                    

சொல்லாமல் தீண்டிச் செல்லும் தென்றலை போல்...
உணரும் முன்... விழி கொண்டு தீண்டிச் செல்லும் உன்னை...
வாழ்வில் காணும் வரம் இன்னும் கிட்டவில்லையே...
உமக்கிருக்கும் சினத்தை எமக்காக தூக்கி எறிந்துவிட்டு
உனக்காய் காத்திருக்கும் பாவையிவளை காண வா என் அன்பே...

ரித்திக் : சரி எனக்கு சில வேலை இருக்கு நா கெளம்புரேன்...

உத்ரா : பாத்து போய்ட்டுவா அண்ணா... என கூற...

அவளருகில் வந்தவன் அவள் முடியை அமைதியாய் கோதிவிட... அவன் கையை பிடித்து தன் கண்ணத்தில் வைத்து கொண்டாள் உத்ரா...

ரித்திக் : குட்டிமா...

உத்ரா : சொல்லுண்ணா...

ரித்திக் : அண்ணன் கிட்ட எதாவது மறைக்கிரியா ...

உத்ரா : இல்ல அண்ணா... இல்ல...

ரித்திக் : அண்ணாவ உனக்கு எவ்ளோ புடிக்கும்..

உத்ரா : இந்த உலகத்த விட ரொம்ப புடிக்கும்..

தீரா ம.வ : அப்போ அவ மாமாவ இந்த பிரவஞ்சத்த விட ரொம்ப புடிக்கும்னு சொல்லுவளோ...

உத்ரா : நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அதான் உண்மை... என முனுமுனுத்தாள்...

ரித்திக் : அண்ணா எதாவது தப்பு பன்றேன்னு தோனுதா டா...

உத்ரா : நீ எதுவும் பன்ன மாட்டண்ணா... பன்னாலும் அதுல காரணமிருக்கும்...

ரித்திக் : ஹ்ம்.. சரி நா போய்ட்டு வரேன்...

உத்ரா : வாண்ணா...

மிரு :வாங்க டி தோட்டத்துக்கு போவோம்...

அன்கி : போலாமே..

உத்ரா : ம்ம் சரி வாங்க...

விஷ்வா : நானும் வரவா...

மிரு : உனக்கு வேற என்ன வேலை வா..

விஷ்வா : ம்க்கும் போடி...

.......................................................................

மெல்ல அடி எடுத்து வைத்த ஆதித் பத்து வருடமாய் திறந்திராது... தூசி படிந்து பூட்டி கிடந்த அவ்வறையின் முன் சென்று நின்றான்.... அவனின் மனம் முழுவதும் பாரம் கூட தொடங்கியது... அவ்வறையை எவ்வளவு மணி நேரம் வெறித்தானோ.... பின் ஏதோ உணர்ந்தவனாய் அதை திரும்பியும் பாராமல் அருகிலிருந்த ஒரு அறைக்குள் நுழைந்தான்...

நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now