18 நீ... நான்...

2.6K 113 145
                                    

அழகாய் பூத்த காலை மலரினை பார்த்து புன்னகைத்த தியா... அதை பரித்து தன் கூந்தலில் சூடி கொண்டாள்... அதிகாலை மணி ஐந்து... அதிகாலையிலே எழுந்தது நம் தியாவின் வாழ்வில் பெரும் சாதனையே... அதை நினைத்து பூரித்து கொண்டவள்.... மாடியிலிருந்து கீழே இறங்கி ஓடினாள்.... அவளின் தாய் அம்ருதா டீ போட்டு எடுத்து வர.... தனக்கானதை வாங்கி மெல்லமாய் ரசித்து ருசித்து அருந்தினாள்...

பிருந்தா பாட்டியும் மரகதம் பாட்டியும் காலை உணவிற்கு தேவையான காய்களை நருக்கிக் கொண்டிருக்க... ராஜேந்திரன் தாத்தா நாற்காலியில் அமர்ந்து... மெத்தையில் சாய்ந்தமர்ந்திருந்த தன் அண்ணன் நாராயனன் தாத்தாவுடன் பேசியவாறு இருந்தார்....

அவர்களருகில் தேவராயன் காலை செய்திதாளை வாசித்து கொண்டிருந்தார்...

தீரா : இவருக்கு இதத்தவிற வேற வேலையே இல்லையோ...

அன்னப்பூரனி ஒரு சோபாவில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருக்க.... காதில் ஹெட்செட்டும்... ஸ்லீவ்லெஸ் டாப்பும்... கொண்டையிட்ட கூந்தலுமாய் வந்து நின்ற ரேகா.... ஒரு சோபாவில் கால் இரண்டையும் தூக்கி மேல் வைத்தவாறு அமர்ந்து எவரையும் மதிக்காது போன் நோண்ட தொடங்கினாள்....

தீரா : இது வேஸ்ட்டு....

அதே நேரம் ரேகாவை போல் இல்லையென்றாலும்... சாதாரண டாப்... மற்றும் பாவாடை... போனீ டெய்லுமாய் வந்த மேகா... அனைவரையும் பார்த்து குட்டி புன்னகை சிந்திவிட்டு மரகதத்தின் அருகில் அமர்ந்து கொண்டாள்....

பாட்டிகள் இருவரும் அவளை பார்த்து புன்னகைத்தனர்...

தீரா : குட் கெர்ள்....

சரியாக ஷியாமும் அம்ருதாவின் அர்ச்சனையை கேட்டவாறு தூக்கம் கலையாத கண்களுடன்... மண்டையை சொரிந்தவாறே கீழே இறங்கி வந்து....

ஷியாம் : குட் மார்னிங் தாத்தாஸ்.... குட் மார்னிங் க்ரனீஸ்... என நாழ்வருக்கும் காலை வணக்கம் தெரிவிக்க....

நாராயனன் மரகதம் : காலை வணக்கம் டா பேராண்டி

ராஜேந்திரன் பிருந்தா : குட் மார்னிங் டா பேரா

நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now