40 நீ... நான்...

2.4K 115 86
                                    

துரை மற்றும் லீலாவின் வாழ்வு இல்லறத்துடன் நல்லறமாய் செல்ல... தினம் அவ்வீட்டினர் காட்டும் அன்பிலும் துரையின் காதலிலும் மனம் மகிழ்ந்து வாழ்ந்தாள் லீலா....

தாத்தா மற்றும் பாட்டிகளுக்கு லீலா இன்னோறு மகளாகி போனாள்... அவர்களின் வாழ்க்கை மிக நலமாய் சென்ற நேரம் இடையில் புகுந்தாள் அன்னப்பூரனி... லீலா முன் நல்லவளை போல் திரிந்த அன்னம் அவள் அறியாத போது துரையிடம் ஏதேனும் கூறி லீலாவை தவறாய் காட்ட முனைந்தாள்..

ஆனால் தலை சுற்றி அவள் மூக்கை தொடுவதை போல் லீலாவை பற்றி தவறாய் கூறுவதாலோ... அல்ல லீலாவின் மீதான அளவில்லா காதலாலோ அன்னத்தின் ஒரு வார்த்தையையும் துரை காதில் வாங்கவில்லை...

திருமணம் முடிந்து ஒரு வருடம் கடந்து குழந்தை பிறக்கவில்லை என்றாலே இன்றைய அதிநவீன காலத்திலே பெண்ணை குறை கூறும் சமூகத்தில்... அன்று உள்ளவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன....

துரை மற்றும் லீலாவின் வாழ்விற்கு இறைவன் குழந்தை பரிசளிக்க தாமதமாக்க... அதை அந்த காதல் தம்பதி புரிந்து கொண்டு... மகிழ்ச்சியுடன் காத்திருக்க... அவர்களை சுற்றி உள்ளோருக்கு அதுவே குறையாய் தெரிய... மெல்ல மெல்ல லீலாவை சுற்றி அவளுக்கே தெரியாமல் அன்னத்தின் வாயிலாக அவளை பற்றிய கீழ்த்தரமான வதந்திகள் பரவியது...

அதை அந்த காதல் ஜோடி சற்றும் கவனிக்காது தன் வேலையில் மூழ்க.... ஒரு நாள் நேரடியாகவே முகத்தில் அடித்தார் போர் கேட்டு விட்டார் மரகதம் பாட்டி...

இதை எதிர்பார்க்காத லீலா தினற... மகள் போல் பார்த்து கொள்வேன் என கூறிய மரகதம் எல்லா மாமியார்களை போல் தன் மகனுக்கு வாரிசில்லையென்ற ஆதங்கத்தில் பட்டென போட்டுடைத்து விட்டார்...

ஆனால் இதில் பெண்ணாய் அவளால் என்ன செய்திட முடியும்... அவள் மாமியாரின் திருப்திக்காய் விரதங்கள் இருக்க தொடங்கினாள்.... இறைவனே கதியென கிடந்தாள்.... காதலாய் தன்னை மகிழ்வுடன் சுற்றி வந்த மனைவி இப்போது வாடிய மலராய் வலம் வருவதை கண்டு பொருக்காமல் அனைவரையும் மீறி சென்னை செல்ல முடிவெடுத்தான் துரை....

நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now