நான் போகிறேன்

41 6 1
                                    

நான் போகிறேன்
இனிமேல் என்னைத் தேடாதீர்கள்..

நான்
ஆணவத்தின் அடிவருடி
அகங்காரத்தின் அஸ்திவாரம்

நான் தனியன்
என்னை
தற்பெருமை தான் ஆக்கிரமிக்கிறது

நான்
சுயநலத்தை வளர்க்கிறேன்
துரோகத்தை விதைக்கிறேன்
அன்பையும் பண்பையும்
அடியோடு அழிக்கிறேன்
ஈவிரக்கமற்ற வெறியர்களை
ஈன்றெடுக்கிறேன்

நான் மற்றவரோடே
என்னையும் அழிக்கிறேன்..

நான் போகிறேன்
என்னைத் தேடாதீர்கள்

நான் என்றவன் இல்லாதிருந்தால்
நாம் என்பது நிலைத்திருக்கும்
சுயநலங்கள் மறைந்திருக்கும்
அன்பும் பண்பும் நிறைந்திருக்கும்
அகிலமெல்லாம் செழிந்திருக்கும்

நான் கொடியவனாயிருந்தும்
ஏன் நீங்கள்
இன்னும் என்னை விரட்டவில்லை..??

நானே போகிறேன்
இனிமேல் என்னைத் தேடாதீர்கள்...

இப்படிக்கு
நான்

****

என் பாதை என் நியதி Where stories live. Discover now