இரை பொறுக்கிகள்

4 1 0
                                    

என்னம்போல் அமைவதில்லை
எல்லார்க்கும் வாழ்க்கை
உன்னைச் சுற்றி இருப்பவரெல்லாம்
உன்னைப்போல் இருப்பதுமில்லை

விதவிதமாய் மனிதர்கள்
படைத்தவன் சதி
விருப்பமோ இல்லையோ
வாழ்வது நம் விதி

பொருள்ஞானம் தோன்றவே
மனிதகுலம்
பொருள் பொறுக்கிகளாய் மாறிவிட்டது
பந்த பாசம் வற்றி வரண்ட நதி
சிறு சிறு குட்டைகளாய்த் தேங்கி விட்டது

குட்டைகளில்
ஒற்றைக்கால் வித்தை காட்டும்
கொக்குகளும்
பொன்நீர்த் தவளைகளும்
பாம்புகளும்
எறுமைகளும்
நீராடுகின்றன

புலிகளும் நரிகளும்
நீரருந்துகின்றன

பிணந்தின்னிக் கழுகுகள்
வானில் வட்டமிடுவதால்
வண்ணக் கிளிகளும்
கானக் குயில்களும்
வெள்ளைப் புறாக்களும்
வெளியே வருவதில்லை

வெளியிறங்கி நடந்தேன்
பச்சோந்திகளின் படையெடுப்பு
பதறிப்போய் வீடுவந்தேன்
முதலைகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தன

வேகமாய் அறைக்குள் நுழைந்தேன்
அங்கே சிதறிக்கிடந்தன
என் கவிதைக் காகிதங்கள்..
அடுக்கி வைத்துவிட்டு
களைத்துப் போனவனாய்
கட்டிலில் சாய்ந்தேன்
சில நிமிடங்கள்
ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவனாய்...
விட்டத்தை வெறித்துக் கொண்டிருக்க
அங்கே ஒரு பல்லி
இரைக்காய் பதுங்கிக் கொண்டிருந்தது
ஆமாம் யாவும் இரைக்காய்த் தான்...

****

என் பாதை என் நியதி Where stories live. Discover now