மனிதனைத் தேடுகிறான்

6 2 1
                                    


நீரற்ற நதியினில்
மீன் பிடிக்க நினைக்கிறாய்
நாரற்ற கல்லினில்-நீ
நாருரிக்க முனைகிறாய்

மனிதம் இங்கே
மரணித்து விட்டது-இன்னும்
மனித உடல்கள் தான்
மரணிக்கவில்லை!!!!

நாகரீக யந்திரங்களாய்
நாங்களெல்லாம் மாறிவிட்டோம்
பாசமென்று எதையோ நீ கேட்கறாய் பாறை எழுந்து நடக்க-நீ
நினைக்கிறாய்

பழங்காலப் பாசத்தினர்த்தம்-நாங்கள்
பணமென மாற்றிவிட்டோம்
நற் குணங்களையுமின்று நாங்கள் பணத்திகே யர்ப்பணித்து விட்டோம்

மாறிவரும் உலகினில்
நீயே னின்னும்
மாறாமலிருக்கிறாய்!!!!
மனிதர்களில்லை நாம்-புதுயுக
யத்திரங்களென்பதை
நீயின்னு மறியவில்லையோ...

அன்பனே
அண்ணை தெரெசா காலத்தில் தான்
நீயின்னு மிருக்கிறாய்
''அப்பிள்'' ''ஐ போன்'' காலத்திற்கு
நாங்களெல்லாம் வத்துவிட்டோம்
அவசரமாய்
நீயும் வந்திடு - இல்லையேல்
பைத்தியம் என்பார்கள்..

****

என் பாதை என் நியதி Where stories live. Discover now