104

898 14 1
                                    

என்னவள் இனி என்னுடன்...
அத்தியாயம் 104

Mr&Mrs உதய் கிருஷ்ணன்...

ஆனந்தி : ஹரி வா டா சொன்னா கேளு...அடம் பிடிக்காத...

"ஹரிகிருஷ்ணன் ஓடி போய் உதய் கால் ஐ கட்டி கொள்ள...

உதய் :"ஏய் என்ன ஓடி பிடிச்சு விளையாடுறீங்களா..."என்று உதய் கிரிஷ் ஐ தூக்கி கொண்டு "ஹரி செல்லத்துக்கு என்ன வேணும்..."என்று கேட்க...

ஹரி ஆனந்தியை கை காட்ட...

உதய் : என்ன ஆனந்தி...

ஆனந்தி : பால் குடிக்க சொன்னா வேணாம் னு ஓடுறான்...

உதய் சிரித்து கொண்டே "என்ன பா குடிங்க...பால் தானே..."என்று சொல்ல...

ஹரி தலையை ஆட்ட...

ஆனந்தி : அச்சோ நீயாச்சு உன் புள்ளையாச்சு.. நா போறேன்...

உதய் : அடியேய் நில்லு டி பிள்ளைய பிடி டி...‌எனக்கு வேலை இருக்கு...

ஆனந்தி : அப்போ நா என்ன சும்மா வா இருக்கேன்... ஆதிரா எழும்புறதுக்குள்ள நா எல்லா வேலைய முடிக்கனும்...

உதய் : அய்யோடா என் செல்லக்குட்டி மேல பழி போடாத...ஆதிரா உனக்கு இம்சை கொடுக்க போகுதா...

ஆனந்தி : இருந்து பார்த்தா தானே தெரியும்.."என்று சொல்லி கொண்டே உள்ளே சென்று பாலா வை அழைத்து வந்தாள்...

ஆனந்தி : பாலா தம்பி நீ தான் பாத்துக்கனும்... தம்பி மனச கஷ்டப்படுற மாதிரி யாரும் பேசிடாம பாத்துக்கோ சரியா..

பாலா :"சரி மா... daily ம் இதே தான் சொல்றீங்க... ஹரி என் தம்பி நா பாத்துக்க மாட்டேனா...போங்க போயி நீங்க ஆதிரா வ போய் பாருங்க..."என்று பாலா ஹரி ஐ அழைத்து கொண்டு செல்ல...

ஆனந்தி அவர்களையே‌ பார்த்தாள்...

வாய் பேச முடியாத ஹரிகிருஷ்ணனை பாலகிருஷ்ணன் கை பிடித்து அழைத்து செல்வதை...

உதய் அவள் தோளில் இடித்து "என்ன டி என் பசங்கள கண்ணு வைக்கிறீயா..."என்று கேட்க...

ஆனந்தி அவனை முறைத்தவாறு "அவங்க என் பசங்களும் தான்..."என்று நகர...

என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)Where stories live. Discover now