முன்னுரை

7.8K 122 16
                                    

முன்னுரை

மிதிலா ஆனந்தை சந்திக்கும் வரை  அகங்காரம் கொண்டவனாய் இருந்தான் ஸ்ரீராம் கருணாகரன். அவளைப் பார்த்த பின், அவன் மாறி விட்டானா என்று கேட்டால், *ஆம், மாறிவிட்டான்* என்று தான் கூற வேண்டும்... இன்னும் அதிக அகங்காரம் கொண்டவனாய் மாறி போனான்...! ஸ்ரீராமின் வாழ்நாளிலேயே அவனுடைய கவனத்தை தன் பக்கம் ஈர்த்த ஒரே பெண் மிதிலா தான். ஏனென்றால், அவள் ஸ்ரீராமின்  *ஃபீமேல் வெர்ஷன்* போல் இருந்தாள். அவனிடம் இருந்த அத்தனை தகுதிகளும் அவளிடமும் இருந்தன... கூறப் போனால், அவனைவிட அதிக தகுதிகளுடன் இருந்தாள் அவள். அது தான் அவனுக்குள் பற்றி எரிந்தது.

அவனுக்கு இருந்த அதீத நம்பிக்கைக்கு காரணம், அவனிடம் கொட்டிக் கிடந்த பணம். பணத்தைக் கொண்டு எதையும் சாதித்து விட முடியும் என்று நம்பினான் ஸ்ரீராம். தன்னிடம் பணம் இல்லாவிட்டாலும், மிதிலாவிடம் நம்பிக்கைக்கு குறைச்சல் இல்லை. ஏனென்றால், அவள் நம்பியது *தன்னை*.

எல்லாவற்றையும் அடக்கி ஆண்டான், ஸ்ரீராம்...! அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் அவன்... ஒன்றை தவிர... அவனது கோவம்! ஆனால் மிதிலாவோ, கோவத்தைக் கட்டுப்படுத்துவதில் கைதேர்ந்தவள். எந்த சூழ்நிலையிலும் தன்னிலை இழக்காதவள்... சமநிலையோடு செயல்படுபவள்...!

அவளுடைய இந்த குணங்கள் தான் அவனுக்கு எரிச்சலூட்டியது. அவளை ஏதோ ஒரு விதத்திலாவது வென்று காட்ட வேண்டும் என்று நினைத்தான் ஸ்ரீராம். அவளை விட தான் தான் சிறந்தவன் என்று நிரூபிக்க துடித்தான் அவன். ஆம்... எல்லாவற்றிலும் தலை சிறந்தவன் என்று பெயரெடுத்த அவன், அவளைவிடச் சிறந்தவனாய் தன்னை காட்டிக் கொள்ள நினைத்தான்.

இந்தப் போராட்டத்தில், அவன் எதை அடைந்தான், எதை இழந்தான், எதைப் பெற்றான், எதை தந்தான், என்பது அவனுக்கே தெரியவில்லை.  மிதிலா அவனுடைய வாழ்க்கையில் அடி எடுத்து வைத்த நாளிலிருந்து, அவனுடைய வாழ்க்கை 360° டிகிரிக்கு மொத்தமாய் திரும்பிப் போனது.

தன்னுடைய விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக செலவிட விரும்பாத அவன், ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சாதாரண பெண்ணை பற்றி, தன்னை விட தாழ்வானவளாக சித்தரிக்க வேண்டும் என்று அவன் நினைத்த ஒரு பெண்ணை பற்றி, சதா சிந்திக்கத் துவங்கினான்...! அவனுக்கே அது விசித்திரமாய் தான் தோன்றியது. ஆனாலும், அவன் அவளுக்குள் மூழ்கி கொண்டிருந்தான்... அனைத்தையும் மறந்து... ஏன் தன்னையே மறந்து...!

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now