1 நேர்காணல்

4.8K 118 15
                                    

1 நேர்காணல்

இந்தியாவின் மிகப் பிரசித்தி பெற்ற ஃபேஷன் கம்பெனியான எஸ்ஆர் ஃபேஷன்ஸ், வழக்கத்திற்கு மாறாக கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது. அங்கு ஒரு மிக முக்கியமான நேர்காணல் நடைபெறவிருக்கிறது. அனுபவத்துடன் கூடிய மிகச்சிறந்த ஒரு பணியாளரை எதிர்பார்த்து காத்திருந்தது எஸ்ஆர் ஃபேஷன்ஸ். அது தனது அசிஸ்டன்ட் மேனேஜிங் டைரக்டர், பரத்துக்கு தேர்ந்த ஒரு உதவியாளரை தேடிக்கொண்டிருந்தது. ஏராளமான ஆண்களும், பெண்களும் அந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அங்கு குழுமி இருந்தார்கள்.

அந்த நேர்முக தேர்வை நடத்த போகும் கம்பெனியின் மேலாளர் குகன், பல்வேறு கேள்வி தொகுப்புகளுடன் தயாராய் இருந்தான். நேர்காணலை முடித்து விட்டு வெளியேறும் நபரை, அங்கிருக்கும் மற்ற நபர்கள் சூழ்ந்து கொண்டு, நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளை தெரிந்து கொள்ள முயல்வார்கள் என்று அவனுக்கு தெரியும். அதனால், அனைவரையும் வேறுவேaறு கேள்விகள் கேட்க, வெவ்வேறு கேள்வி தொகுப்புகளுடன் அவன் தயாராக இருந்தான். இதையெல்லாம் பார்க்கும் போது, ஐஏஎஸ் பரீட்சையே சுலபமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இன்று, இந்த நேர்காணலை நடத்துவதைத் தவிர வேறு எந்த வேலையும் குகனுக்கு இருக்கப் போவதில்லை. நேர்காணலில் கலந்துகொள்ள இருப்பவர்களின் நீண்ட பட்டியல், அதை அவனுக்கு எடுத்துக் கூறியது. எஸ்ஆர் ஃபேஷன்சின் ஏஎம்டியின் நேர்முக உதவியாளர் என்றால் சும்மாவா?

நல்ல வேலை, அந்த நேர்முகத் தேர்வு, அந்தக் கம்பெனியின் எம்டி, ஸ்ரீராம் கருணாகரனின் உதவியாளருக்காக நடத்தப்படவில்லை. ஏஎம்டிக்கே இவ்வளவு அலப்பறை என்றால், அதன் எம்டிஐ பற்றி கேட்கவா வேண்டும்? உண்மையைச் சொல்லப் போனால், ஸ்ரீராமுக்கு எப்பொழுதும் ஒரு உதவியாளர் தேவைப்பட்டது இல்லை. அவனுடைய வேகத்திற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது. மேலும், ஒரே ஒரு உதவியாளர் அவனுக்கு போதாது. ஒட்டுமொத்த கம்பெனியுமே அவனை சுற்றி தான் சுழன்று கொண்டிருக்கும்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now