5 நேர்மறை எண்ணம்

2.5K 96 10
                                    

5 நேர்மறை எண்ணம்

ஆனந்த குடில்

கர்ப்பவதியான தன் அக்கா பிருந்தாவுடன் பேசிக் கொண்டிருந்தாள் மிதிலா. தனது அம்மா, அப்பாவையும், தங்கையையும் பார்ப்பதற்காக தனது கணவனுடன் பிறந்தகம் வந்திருந்தாள் பிருந்தா.

"இன்டர்வியூ எப்படி பண்ணியிருக்க, மிதிலா?" என்றான் மிதிலாவின் அக்காவின் கணவனான சதீஷ்.

"நம்ம ஒத்துக்கிட்டே ஆகணும், எஸ் ஆர் ஃபேஷன்ஸ், நம்பர் ஒன் கம்பெனியா இருக்கிறதுல எந்த ஆச்சரியமும் இல்ல. அவங்க இன்டர்வியூவை நடத்தின விதமே அவங்களுடைய ஸ்டாண்டர்ட் எப்படிப்பட்டதுன்னு சொல்லுது..." என்று சிலாகித்தாள் மிதிலா.

"அதுக்காகத் தான், உனக்காக நான் அந்த ஜாபுக்கு  அப்பளை பண்ணேன். அந்த போஸ்டுக்கு நீ எலிஜிபிலா இருப்ப."

"எஸ் ஆர் ஃபேஷன்சை கம்பேர் பண்ணும் போது, நான் இதுக்கு முன்னாடி வேலை செஞ்ச கம்பெனி ஒன்னுமே இல்ல."

"ஆனா, அந்த கம்பெனியில் வேலை செஞ்சப்போ, நீ மல்டி ஒர்க்கரா இருந்திருக்க. அந்த அனுபவம், உனக்கு எஸ் ஆர் ஃபேஷன்ஸில் நிச்சயம் கை கொடுக்கும்"

"நான் இன்டர்வியூவை ரொம்ப நல்லா பண்ணி இருக்கேன். அவங்க மேனேஜர் முகத்தில் ஒரு திருப்தி தெரிஞ்சது"

"உனக்கு நிச்சயமா அங்க வேலை கிடைக்கும்.  உன்னுடைய எதிர்காலமே மாறப் போகுது பாரு." என்று உண்மையை கூறினான் சதீஷ்.

சில மாதங்களுக்கு முன்பு தான் சதீஷுக்கும் பிருந்தாவுக்கும் திருமணம் நடைபெற்றது. சதீஷ், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். பிருந்தாவை மிகவும் நேசிப்பவன். அவர்களின் திருமணத்திற்காக தான், ஒரு பெரிய தொகையை கடனாகப் பெற்றார் மிதிலாவின் அப்பா ஆனந்தன். அவருடைய வருமானத்தில், மூன்றில் இரண்டு பங்கு பிடித்தம் செய்யப்படுகிறது. தானும் பணியில் இருப்பதால், அவருக்கு கடன் வாங்க சொல்லி தைரியம் அளித்தது மிதிலா தான். தன் வேலையை இழப்போம் என்று அவள் அப்போது நினைத்திருக்கவில்லை. இது தான் அவர்களின் குடும்ப நிலைமை. அதனால் தான், தனக்காக ஒரு வேலையை மும்முரமாய் தேடிக் கொண்டிருக்கிறாள் மிதிலா.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now