9 எதிர்பாராத தீர்வு

2.1K 103 22
                                    

9 எதிர்பாராத தீர்வு

தன் தோளில் யாரோ தட்டுவதை உணர்ந்து, திரும்பி பார்த்தாள் மிதிலா. அங்கு லட்சுமன் நின்றிருந்தான்.

"எங்க போயிருந்த? நான் வந்தப்ப நீ இங்க இல்லையே" என்றான்.

"நாங்க குடோன் ஸ்ட்ரீட் போயிருந்தோம்..."

"நாங்கன்னா?"

"நானும், குகனும்"

"நீயும், குகனுமா? எதுக்கு?"

"பர்ச்சேஸ்காக"

"கரீம் ஷாப்புக்கா போயிருந்தீங்க?"

"ஆமாம்"

"எதுக்காக என்னை கூப்பிடாம போனீங்க?"

"அது ஒரு அஃபிஷியல் பர்ச்சேஸ்"

"என்னது? நீ ஒன்னும் கிண்டல் பண்ணலையே...? எஸ்ஆர் ஃபேஷன்ஸ்க்கு, கரீம் ஷாப்ல பர்ச்சேஸா...? இதை என்னால நம்ப முடியல"

அங்கிருந்து நேராக குகனின் அறைக்குச் சென்றான் லட்சுமன்.

"நான் கேள்விப்பட்டது உண்மையா?"

"எதை கேக்குற?" என்றான் குகன்.

"கரீம் ஷாப்லயா பர்சேஸ் பண்ணிங்க?"

"கரீமை உனக்கு தெரியுமா?"

"தெரியும். நாங்க காலேஜ் படிக்கும் போது, மிதிலா கூட ஒரு தடவை அவர் கடைக்கு போயிருக்கேன்"

"ஆனா, அவர் கடையை பத்தி நீ சொல்லவே இல்லையே. நமக்கு இப்போ மெட்டீரியல்ஸ் தேவைப்படுதுன்னு உனக்கு தெரியாதா?"

"என்னமோ, ராமு என்னுடைய ஐடியாவை எடுத்துக்குற மாதிரி நீ பேசுற...? அவனைப் பத்தி எனக்கு தெரியாதா?"

ஆமாம் என்று தலையசைத்தான் குகன்.

"கரீம் ஷாப்ல மெட்டீரியல் வாங்க, ராமு எப்படி ஒத்துக்கிட்டான்?"

"அவன் பர்மிஷனை யார் கேட்டது?"

"என்ன சொல்ற?"

"அவன்கிட்ட பர்மிஷன் வாங்க நமக்கு டைம் இல்ல. அவன் நிச்சயம் கரீம் ஷாப்ல மெட்டீரியல் வாங்க ஒத்துக்க மாட்டான். அதனால அவன்கிட்ட கேட்காமலேயே நாங்க வாங்கிட்டோம்"

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now