~01~

126 12 36
                                    

            கால் மேல் கால் போட்டு சுவற்றில் சாய்ந்தாற் போல கதிரையில் அமர்ந்திருந்த அப்பெண்மணி கண்களை மூடிக்கொண்டு எதைப் பற்றியோ வெகு தீவிரமாகச் சிந்தனை செய்வதை போலவே அதீனாவுக்குத் தென்பட்டது.

அடுப்பில் வைத்திருந்த சட்டியிலிருந்து ஆவி பறந்து கொண்டிருக்க, சட்டிக்கும் மூடிக்கும் இடையிலிருந்த சிறு துவாரத்தின் வழியாக வெளி வந்த கோழிக்கறியின் வாசனை அவளது மூக்கைத் தொட்டது.

அதீனாவின் கவனத்தை ஈர்த்தது சட்டியோ, கோழிக்கறியோ இல்லை. மாறாக, சமையற்கட்டின் மீது ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த அவித்த முட்டைகளைத் திருட்டு முழியுடன் பதம் பார்த்துக் கொண்டிருந்த பூனை தான்.

அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருக்கிறாரா? என ஒரு கணம் யோசித்தவள் தாமதிக்காது கையிலிருந்த கடித உறையினால் கள்ளப் பூனைக்கு விட்டெறிந்தாள். அது விட்டால் போதுமென்று பாய்ந்தோடி விட்டது.

"ஆன்டி, அஸ்ஸலாமு அலைகும்" என்று வேகமாக விளித்ததும் கண்களைத் திறந்த அப்பெண்மணி அதீனாவைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துப் புன்னகைத்துக் கொண்டு, "வஅலைகுமுஸ்ஸலாம்" என்றதைக் கண்டு அவளுக்கு வியப்புத் தாங்கவில்லை.

"உள்ள வாங்க. யாரு...?" என்றதும் பாதணிகளைக் களைந்து விட்டு உள்ளே வந்தவள் நிலத்தில் விழுந்திருந்த கடித உறையைப் பொறுக்கி எடுத்துக்கொண்டாள். இன்னுமே அவர் அதீனாவின் பக்கம் தன் பார்வையைத் திருப்புவதாகத் தெரியவில்லை.

"அல்லாஹ்வே! முட்டயத் திறந்து வச்சிட்டு வந்துட்டேனே உம்மா. பூன ஏதும் வந்திருந்தா.." என்று படபடத்தவாறே தொழுகைக்குத் தயாராவது போல முந்தானையைத் தலையைச் சுற்றிக் கட்டிக்கொண்ட பெண்ணொருத்தி சமையலறைக்குள் நுழைந்து பே என்று வாயைப் பிளந்தவாறு நின்றிருந்த அதீனாவை நின்று நோக்கினாள்.

"தாத்தா, பூன வந்து இதுல வாயப் போட்டிச்சு. விரட்டினதும் ஓடிடுச்சி" என்றாள் அதீனா, அவித்த முட்டைப் பாத்திரத்தைக் காட்டி. அதைக் கேட்டுப் பதறிய மற்றவள்,

இதயத்திலோர் ஆணிWo Geschichten leben. Entdecke jetzt