~02~

71 11 44
                                    

             உச்சி வெயில் மெது மெதுவாகத் தணிய ஆரம்பித்திருந்தது. பகலுணவை உண்டு விட்டு அனைவரும் ஆறுதலாக அமர்ந்திருந்த நேரம், தாரிகாவிடம் அந்தக் கேள்வியைக் கேட்டாள் அதீனா.

"மா, அந்த கரீமா தாத்தாட உம்மா பேர் என்ன?" என்று ஆரம்பித்தவள், "நான் போனதிலிருந்து அவ என்ட முகத்தப் பாக்கவேயில்ல. வேற எங்கோ பார்த்துட்டுப் பேசினா" என்று கூறி சலித்துக் கொண்டாள்.

"அடடே.. உங்களுக்குத் தெரியாது இல்லயா? ஷியாமா தாத்தாக்கு பொறந்ததுல இருந்தே கண் தெரியுறதில்லயாம்" என்றதும் அதீனாவுக்கு ஏக அதிர்ச்சி. கண்ணிமைகள் உயர்ந்து நிற்க, நடந்தவற்றையெல்லாம் சில கணங்கள் சிந்தித்துப் பார்த்தாள்.

அவரது நடத்தைகளுக்கான காரணம் இப்போது தான் புரிந்தது. அவர் மீதிருந்த சிறு கோபம் நீங்கி அன்பு பிறந்தது. பிறவிக் குருடாக இருப்போரின் நிலையைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தாள். இறைவன் வழங்கியிருக்கும் அருட்கொடைகளுக்கு அவள் போதுமான அளவு நன்றி செலுத்துகிறாளா?

அடுத்த வீட்டில் நிறையப் பேர் வந்திருப்பதற்கு அறிகுறியாகக் கலகலப்பு ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. புதிய வீட்டில் முதல் விருந்து போலும்.

"அதீனா, மேல போய் காஞ்ச புடவையெல்லாம் எடுத்துட்டு வாங்கம்மா" என்று தாரிகா கூறியதும் முந்தானையினால் தன்னை முழுவதுமாகப் போர்த்திக் கொண்டு வீட்டுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மாடிப்படிகளில் ஏறி மேலே சென்றாள்.

பழைய பாத்திரங்களிலும், பைக்கற்றுக்களிலும் நடப்பட்டிருந்த தாவரங்களெல்லாம் மொட்டை மாடியில் அமர்ந்திருந்து இவள் வருவதைக் கண்டதும் இலைகளை அசைத்துச் சிரித்தன. படிக்கட்டுக்களில் ஏறி முடித்தவள் சில கணங்கள் நின்று சுத்தமான காற்றை இரண்டு மூன்று முறை உள்ளிழுத்து வெளி விட்டாள்.

பூஞ்செடிகளை அருகில் சென்று இரசித்தவள் காயப் போடப்பட்டிருந்த துணிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கையில் சேர்க்கலானாள். சற்றுத் தள்ளி ஆண்குரலொன்று கேட்டதும் சுற்றுமுற்றும் திரும்பிப் பார்க்க, அடுத்த வீட்டு மொட்டை மாடியில் நின்றிருந்த அய்னைன் தொலைபேசி அழைப்பொன்றை ஏற்றுக் கதைத்துக் கொண்டிருந்தான்.

இதயத்திலோர் ஆணிHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin