~07~

43 9 11
                                    

             மாமரத்தின் கிளையினூடே புகுந்து வந்து தன் கண்களைக் கூசச் செய்த சூரிய ஒளிக்கீற்றுக்களைக் காண முடியாமல் திரைச்சீலையை இழுத்து மூடினாள் அதீனா. அவள் ஓடர் செய்திருந்த கேக்குடன் இஷால் மீண்டும் அவள் வீட்டுக்குப் புறப்பட்டு வந்திருந்தாள்.

"ஏன் டி? எடுத்துட்டுப் போக நான் வந்திருக்க மாட்டேனா?" என்று தோழியைக் கடிந்து கொண்டாள்.

"இல்ல.. உன்னப் பாக்கணும் போல இருந்துச்சா, அதான் நானே வந்தேன். கரீமா தாத்தாட கேக்கயும் குடுத்துட்டு வந்த.." என்கையில் அதீனாவின் கண்களிரண்டும் விரிந்தன.

பின்னர் தோழியரிருவரும் தங்கள் உலகினுல் மூழ்கிச் செல்ல, நேரம் கடந்து போனதே தெரியவில்லை. ஒரு வாரத்துக்கு முன்னர் இஷாலைப் பெண் பார்க்க வந்தவர்களின் கதை என்னவாயிற்று என்று கேட்ட போது,

"அது அதீனா.. உனக்கே தெரியும். நான் இவ்ளோ நாளா ஒரு ஆம்பிளயப் பத்தியாவது நினச்சதில்ல. எனக்கு வர்ர ஹஸ்பன்டும் அதே மாதிரி இருக்கணும்கறது என்னோட எதிர்பார்ப்பு. எங்க உம்மா யாருட்ட கேட்டாலும் அவங்கட முதல் கேள்வி என்ன தெரியுமா? பொண்ணுட ஃபோட்டோவ அனுப்புங்க அது இதுன்னு. எனக்கு இந்த ஃபோட்டோ அனுப்புற வேலையெல்லாம்.. ப்ச்.. அது எத்தன பேருக்கு போகும்? யாருன்னே தெரியாத எத்தன பேர் பார்ப்பாங்க? கடைல புடவை வாங்குற மாதிரி பொண்ணப் பாத்துட்டு புடிச்சிருக்கு, புடிக்கலன்னு சொல்றது.." சற்று நிறுத்தி பெருமூச்சொன்றை இழுத்து விட்டாள்.

"கல்யாணம் முடிஞ்ச பிறகும் அந்த ஃபோட்டோ எத்தன பேருட ஃபோன்ல இருக்கும்? இந்த விஷயத்துல எல்லாரும் அலட்சியமா இருக்கதப் பாத்தா.. அதனால தான் நான் உம்மாட்ட முதல்லயே சொன்னேன் இந்த வேலையெல்லாம் எனக்கு சரி வராதுன்னு. நான் யாருக்கும் ஃபோட்டோ அனுப்பல. பயோ டேட்டாவ பாத்துட்டு புடிச்சிருந்தா நேர்ல வந்து பாக்க சொல்லுங்கண்ணு சொல்லிட்டேன். அப்டி தான் அவங்களும் வந்தாங்க" என்று விட்டு அதீனாவின் முகத்தைப் பார்த்தாள்.

இதயத்திலோர் ஆணிWhere stories live. Discover now