~04~

63 12 24
                                    

            ஆசிரியராகப் பணியாற்றும் அய்னைன் இங்கு புது வீடு கட்டிக் குடி வந்து விட்டதால் அருகிலுள்ள ஊர்ப்பாடசாலைக்கே மாற்றலாகி வர நினைத்து விண்ணப்பித்திருந்த, அவனது எண்ணம் நிறைவேறியும் இருந்தது.

நாளையே சென்று பாடசாலையில் இணைந்து கொள்ளும்படி கூறியிருந்த அந்தக் கடிதத்தை மீண்டுமொரு முறை படித்து விட்டு உறைக்குள் போட்டு அப்படியே வைத்தவன், நல்லதொரு நீளக்கைச் சட்டையை எடுத்து அயன் செய்யத் துவங்கினான்.

அவனது தமக்கை கரீமாவின் மூன்று வயது மகன் வந்து கால்களைக் கட்டிக் கொண்டு அவனுக்கு வேலை செய்ய விடுவதாக இல்லை. எப்படியோ அயன் செய்து முடித்து விட்டு சமையலறையிலிருந்து வந்த பொறியல் வாசனையை மோப்பம் பிடித்தவாறே சிறுவன் தமீமைத் தூக்கிக் கொண்டு அங்கு சென்றான்.

கரீமா அடுப்பிலிருந்த சட்டியில் ஏதோ கிளறிக் கொண்டிருக்க, அவளது கணவன் வஸீம் போஞ்சிக்காய்களை அரிந்து கொண்டிருந்தான். தமீமைத் தன் மடியில் அமர்த்தியவாறு தானும் ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டான் அய்னைன்.

"எங்க உம்மா?" அவன் தான் கேட்டான்.

"தல வலின்னு படுக்குறா போல" என்ற கரீமா சட்டியை மூடி விட்டு வந்து அரிந்து வைத்திருந்த போஞ்சிக்காய்களை எடுத்துச் சென்றாள்.

மூவரும் சாதாரண விடயங்களைக் கதைத்தவாறிருக்க, நேரமும் ஒன்பதைத் தொட, உணவு மேசை மீது ஆவி பறக்க தயாராக இருந்தது.

*
அடுத்த நாள் காலை ஆறு நாற்பத்தைந்து மணிக்கெல்லாம் புதிய பாடசாலைக்குச் சென்று கையொப்பமிட்டு விட்ட அய்னைனுக்கு அந்தக் கலவன் பாடசாலையும் அதன் பசுமையான சுற்றுச்சூழலும் மிகவும் பிடித்துப் போனது.

அவனை அன்புடன் வரவேற்ற அதிபர் காலைக்கூட்டத்தின் போது மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியும் வைத்ததால் அனைவருக்கும் அவனைப் பற்றி முதல் நாளே தெரிந்து போயிற்று.

தரம் எட்டுக்கும் ஒன்பதுக்கும் தான் விஞ்ஞானப் பாடம் எடுக்க அவனை நியமிக்கப் போவதாகவும், நேரசூசி தரும்வரையில் ஆசிரியர்கள் வராத வகுப்புக்களில் சில பாடவேளைகளுக்கு அவனை அனுப்பி வைத்தார் அதிபர்.

இதயத்திலோர் ஆணிDonde viven las historias. Descúbrelo ahora