12 பொறி

2K 100 10
                                    

12 பொறி

ஸ்ரீராமுடைய அறையிலிருந்து மிதிலா வெளியில் வந்த போது அவளுக்காக குகனும், லக்ஷ்மணனும் காத்திருந்தார்கள்.

"நீங்க இன்னும் போகலையா?" என்றாள் மிதிலா.

"உன்னை விட்டுட்டு நாங்க எப்படி போறது?" என்றான் லக்ஷ்மன்.

"ஷோவை பத்தி முழுசா கத்துக்கிட்டாச்சா?" என்றான் குகன்.

"ஆமாம். எல்லாத்தையும் நான் ஒரே நாள்ல கத்துக்கணும்னு நினைக்கிறார் ஜூனியர்" என்றாள் பெருமூச்சுவிட்டபடி.

"உங்களுடைய எபிளிடி என்னன்னு அவனுக்கு தெரியும்... அதனால அப்படி செஞ்சிருப்பான்..." என்றான் குகன்.

"நீங்க எதுக்காக உங்க ஃபிரண்டுக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு வரிங்க? அவரைப் பத்தி உங்களுக்கு தெரியாதா? என்னை மாதிரி லோ-க்ளாஸ் ஆளுங்களை அவருக்கு பிடிக்காது"

"இல்ல மிதிலா. அவனுக்கு பிடிக்காத யார் கூடவும் அவன் இருக்கவே மாட்டான்"

"அதனால தான், பிரேக்கே இல்லாம, ஒரு நாள் முழுக்க வேலை செய்ய வச்சார் போலிருக்கு..."

"நீங்க ஒரு ஆப்டிமிஸ்டிக்... ஆனா, எஸ்ஆர்கே விஷயத்தில் மட்டும், நீங்க ஏன் இவ்வளவு அப்ஸட் ஆகுரீங்கன்னு எனக்கு புரியல."

"நம்மளுடைய ஆட்டிட்யூட், ஆளுக்கு ஏத்தமாதிரி மாறும்"

"அவன், உன் மேல கோவபடலயே...?" என்றான் லக்ஷ்மன்.

"இல்ல. ஆனா, ஏதோ ஒரு பில்டர் மேல ரொம்ப கோபப்பட்டாரு. அவருடைய முகம் ரொம்ப டேஞ்சரஸ்ஸா மாறிச்சி"

"ஆமாம். அந்த பில்டர் எனக்கும் பேசினாரு. நான் தான் எஸ்ஆர்கேகிட்ட உண்மையான நிலவரத்தை பத்தி சொல்ல சொன்னேன். ஏன்னா, இந்த விஷயத்தில் அவனால தான் முடிவெடுக்க முடியும்" என்றான் குகன்.

"ஆனா, இந்த விஷயத்தைப் பத்தி முடிவெடுக்க, வேற யாரையாவது அனுப்புறேன்னு சொன்னாரே...?"

"ஏன்னா, நாளைக்கு அவங்க அம்மா அப்பாவுடைய நினைவு நாள். நாளைக்கு அவன் யாருக்கிட்டயும் பேசவே மாட்டான். அக்காகிட்ட கூட..." என்றான் லட்சுமணன் சோகமாக.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now