13 உள்ளுணர்வு

1.9K 99 8
                                    

13 உள்ளுணர்வு

கட்டிடத்தினுள் சுவாமிநாதனை தேடிப்பார்த்து, அவர் இல்லாமல் போகவே, வெளியில் செல்ல எத்தனித்த மிதிலா, கதவு சாத்தப்பட்டு இருப்பதை பார்த்து பதறினாள். எவ்வளவு தட்டியும் யாரும் கதவைத் திறக்க வில்லை. ஆபத்தான அந்த இடத்திலிருந்து சென்று விட்டிருந்தார் சுவாமிநாதன். எவ்வளவு முயன்றும் கதவை அவளால் திறக்க முடியவில்லை. தான் வசமாய் அகப்பட்டுக் கொண்டுவிட்டது புரிந்து போனது மிதிலாவுக்கு. யாரோ வெளியில் இருந்து கதவை சாத்திவிட்டு இருக்கிறார்கள். ஆனால், கதவை சாத்தியவர்களுக்கு, அவள் உள்ளிருப்பது தெரியுமா, இல்லையா, என்பது தான் அவளுக்கு புரியவில்லை.

அவளிடம் கைப்பேசியும் இல்லாததால், அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எப்படிப்பட்ட பிரச்சனைக்கும் விடை காணக்கூடிய தைரியசாலியான அவள், அன்று மொத்தமாய் தைரியத்தை தொலைத்தாள். தான் சாவை நெருங்கி விட்டோம் என்று தோன்றியது அவளுக்கு. முதல் நாள் மாலை, அந்த கட்டிடத்தின் நிலையைப் பற்றி ஸ்ரீராம் ஃபோனில் பேசியது அவள் நினைவுக்கு வந்தது. இங்கும் அங்கும் தேடி பார்த்தவளுக்கு, கட்டிட வேலைக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு இரும்பு மேஜை கண்ணில் பட்டது. கடவுளின் மீது பாரத்தைப் போட்டு அமைதியாய் சென்று அதன் அடியில் அமர்ந்து கொண்டாள்.

இதற்கிடையில்

எஸ் ஆர் ஃபேஷன்ஸ்

அலுவலகம் வந்த குகன், நேராக மிதிலாவின் அறைக்கு சென்றான். இன்று, அவனுக்கு காபி போட்டு தருவதாக அவள் கூறியிருந்தாள் அல்லவா...? ஆனால், அவளை காணாததால் அவனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. அவள் எப்பொழுதும் அலுவலகத்திற்கு சீக்கிரம் வந்து விடுபவள் ஆயிற்றே...!

"ஒருவேளை டிராபிக்கில் மாட்டிகிட்டாங்களோ...?" என்று தனக்குத் தானே கூறியபடி ஸ்ரீராமின் அறைக்குச் சென்றான்.

அவனது கைப்பேசிக்கு, ஸ்ரீராம் எந்த குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை. அதனால் தன்னுடைய அறையில் அவன் ஏதாவது எழுதி வைத்திருக்கிறானா என்று தேடிப் பார்த்தான் குகன். அங்கும் அவனுக்கு எந்த செய்தியும் இல்லாமல் போகவே, தான் செய்ய வேண்டிய வேலையில் மூழ்கினான்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now