14 ரசிகை

2.1K 100 12
                                    

14 ரசிகை

ஸ்ரீராமின் குரல் கேட்டு, தான் கனவு காண்பதாக நினைத்தாள் மிதிலா. ஆனால் யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டதால், கண்களை திறந்து வைக்க முயன்றாள். உள்ளே வந்த ஸ்ரீராம் இங்குமங்கும் தேடியபடி, மீண்டும்

"மிதிலாலாலாலா" என கத்தினான்.

தன் பெயரை, ஸ்ரீராம் மீண்டும் அழைத்ததை கேட்டு, தன் உடலில்  மீதமிருந்த சக்தியை ஒன்று திரட்டி, தான் அமர்ந்திருந்த மேஜையின் அடியிலிருந்து மெல்ல வெளியே வந்து, அருகிலிருந்த தூணை பிடித்துக்கொண்டு நின்றாள்.

அவள் தன் நினைவை இழந்து கொண்டிருக்கிறாள் என்பதை, அவளை பார்த்தவுடன் புரிந்து கொண்டான் ஸ்ரீராம். அவள் கீழே விழும் முன், ஓடிச்சென்று அவள் தோள்களைப் பற்றிக்கொண்டான். அவன் மார்பில் சாய்ந்து, பூரணமாய் தன் நினைவை இழந்தாள் மிதிலா. பலவீனமடைந்திருந்த அவளை தன் கரங்களால் சுற்றி வளைத்துக் கொண்டான் ஸ்ரீராம், தன்னையறியாமல். இடிந்து விழக் காத்திருக்கும் கட்டிடத்தில் தான் நிற்கிறோம் என்பதை மறந்து, மிஸ் ஆனந்தை  அணைத்தபடி அப்படியே நின்றான் ஸ்ரீராம்.

மிதிலா மயங்கிவிட்டது, உண்மையிலேயே ஸ்ரீராமின் துரதிஷ்டம் தான். அவள் சுயநினைவுடன் இருந்திருந்தால், அவனது மார்பில் சாய்ந்திருந்த அவள், அவனது இதயம் எவ்வளவு வேகமாய் துடித்தது என்பதை கேட்டிருப்பாள். ஸ்ரீராமின் பதட்டத்தை, அவனது இதயத் துடிப்பின் மூலம் அவள் அறிந்திருப்பாள். அவளைப் போலவே அவனும் பயந்து தான் போயிருந்தான். அவளுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற பயம்... நல்ல வேளை, அவன் அவளை காப்பாற்றி விட்டான். என்ன நினைத்துக்கொண்டு, அவளை அணைத்துக் கொண்டு நிற்கிறான் என்பது தான் நமக்கு புரியவில்லை. ஒருவேளை, அவனுக்கே கூட புரியவில்லையோ என்னவோ...!

குகன் ஒரு மிகச் சிறந்த நண்பன். உயிர் காப்பான் தோழன் என்னும் சொல்லுக்கு ஏற்ப நடப்பவன். இப்பொழுதும் அவன் தன் நண்பனின் உதவிக்கு வந்தான். தன்னை மறந்து நின்றிருந்த ஸ்ரீராமை, ஃபோன் செய்து சுயநினைவுக்கு கொண்டு வந்தான். தான் நின்றிருந்த இடத்தை பார்த்து திகைப்படைந்தான் ஸ்ரீராம்.  இன்னும் அவன் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறான்? மிதிலாவை தன் கைகளில் ஏந்தி கொண்டு, அங்கிருந்து நடந்தான்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now