17 தொழிலதிபர்கள் கூட்டம்

2K 92 16
                                    

17 தொழிலதிபர்கள் கூட்டம்

ஸ்ரீராமின் அறைக்குச் சென்ற குகன், மாடிப்படி ஏறும் முன் நின்றான். எதையோ யோசித்தவன், மிதிலாவின் அறைக்கு வந்தான். அவள் பாட்டிலில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தாள். தண்ணீர் குடித்தபடியே, புருவத்தை உயர்த்தி *என்ன?* என்றாள்.

"எஸ்ஆர்கே கேபினுக்குள்ள போக எனக்கு உங்க பர்மிஷன் கிடைக்குமா, மேடம்?" கையை கட்டிக்கொண்டு பவ்யமாக கேட்டான் குகன்.

அதைக்கேட்டு, தன் வாயில் இருந்த தண்ணீரை துப்பிவிடாமல் வாயை பொத்திக் கொண்டாள் மிதிலா. அந்த தண்ணீரை முழுங்கிவிட்டு வாய்விட்டு சிரித்தாள். தன் கையில் இருந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை அவள் குகனின் மீது தெளிக்க, அந்த தண்ணீர் தன் மீது பட்டு விடாமல் தன்னை காத்துக்கொள்ள அவன் சிரித்தபடி பின்னால் எகிறி குதித்தான்.

"என்னை கிண்டல் பண்றதை நிறுத்துங்க, குகா"

"நான் கிண்டல் பண்ணல... ஒருவேளை, எஸ்ஆர்கே என்னை
*கெட்அவுட்* சொல்லிட்டா என்ன செய்யுறது?" என்றான் சிரித்தபடி.

"மொத்தமா இந்தத் தண்ணியை ஊத்தி, உங்களை நனைக்கிறதுக்கு முன்னாடி, இங்கிருந்து ஓடி போயிடுங்க" என்றாள் அந்த பாட்டிலை உயர்த்தி பிடித்தபடி.

சிரித்தபடி அங்கிருந்து சென்றான் குகன். அந்த இருவருக்கும், தாங்களை ஒருவன் அவனது அறையின் கண்ணாடி சுவரின் வழியாக, பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்து கொண்டிருக்கிறான் என்பது தெரியாது. எப்படி அவர்களால் இவ்வளவு சகஜமாக இருக்க முடிகிறது? அவர்களுக்கு பேசவும் விளையாடவும் எப்படி ஏதாவது கிடைத்துவிடுகிறது? அவனுக்கு எரிச்சலாக இருந்தது. தன்னால் முடியாதது மற்றவர்களால் முடியும் போது *எரிவது* ஸ்ரீராமுக்கு சகஜம் தானே...!

தனது அறையின் கதவை, குகன் தட்டுவதை பார்த்தான் ஸ்ரீராம்

"குட்மார்னிங் எஸ்ஆர்கே"

"ஒர்க்கிங் ஹவர்ஸ்ல விளையாடுறதை எப்போ ஆரம்பிச்ச?" என்று கேட்டான், முடிந்தவரை கோபப் படாமல் இருப்பதற்கு முயன்று கொண்டு.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now