26 கொண்டாட்டம்

2.2K 106 15
                                    

26 கொண்டாட்டம்

பூவனம்

எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை தினேஷுக்கு. நேற்று கோவிலில் நடந்ததை பற்றி தான் அவன் நினைத்துக் கொண்டிருந்தான். அவளது தம்பியைப் பற்றி கூறினால், நர்மதா நம்புவாளா என்று அவனுக்கு தெரியவில்லை. அவள் நம்பாமல் போனாலும் அது தவறில்லை. ஏனென்றால், ஸ்ரீராம் அப்படிப்பட்டவன் தான். பெண்களைப் பற்றியெல்லாம் நினைக்க அவனுக்கு நேரமுமில்லை, அவனுக்கு அதில் விருப்பமும் இல்லை. ஆனால், அவன் மிதிலாவிடம் நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கும் போது அப்படி தோன்றவில்லை. ஸ்ரீராம், வேண்டுமென்றே தான் மிதிலாவுக்கு தண்ணீரை புகட்டினான் என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இதைப் பற்றி நர்மதாவிடம் கூறத்தான் வேண்டும்.

அவன் தோளை யாரோ தொட, திடுக்கிட்டு திரும்பினான் தினேஷ்.

"நான் தான்" என்றாள் நர்மதா.

"நீயா நர்மதா?"

"என்ன தீவிரமா யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க?"

"நீ என்ன நினைப்ப... எப்படி எடுத்துக்குவேன்னு தெரியல..."

"நீங்க என்ன சொல்றீங்க?"

"நேத்து கோவில்ல என்ன நடந்ததுன்னு தெரியுமா?"

"என்ன?" என்றாள் சாதாரணமாக.

"ராமு, மிதிலாவை தண்ணி குடிக்க வெச்சார்..."

"என்ன்ன்ன்னது....?" என்று அதிர்ந்தாள்.

ஆமாம் என்று தலையசைத்தான் தினேஷ்.

நர்மதாவுக்கு திக்கென்றது. ஸ்ரீராம், மிதிலாவை தண்ணீர் குடிக்க செய்தானா? மிதிலா விரதமிருந்த விஷயம் தெரியாமல் செய்தானா, அல்லது தெரிந்தே செய்தானா...? தெரியாவிட்டாலும் அவன் எப்படி அதைச் செய்வான்? அவனுக்கு தான் இந்த விரதத்தை பற்றி நன்றாக தெரியுமே...! அதனால் தானே, நர்மதா வெகுநேரம் பசியோடு இருக்கக்கூடாது என்று, தினேஷ் வருவதற்கு முன்பு, காலம் தாழ்த்தாமல், அவனாகவே அவளை கோவிலுக்கு அழைத்து வந்து விரதத்தை முடிக்கச் செய்தான்...!

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now