29 ஸ்ரீராமின் விருப்பம்

2.1K 105 17
                                    

29 ஸ்ரீராமின் விருப்பம்

தான் யுவராஜுடன் பேசியதை, ஸ்ரீராம் கேட்டுக் கொண்டு நின்றிருந்ததை பார்த்தாள் மிதிலா. அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், தன் வேலையை தொடர்ந்தாள் அவள். அவனுக்கு அவள் எந்த முக்கியத்துவமும் வழங்கவில்லை என்பதை அது தெள்ளத் தெளிவாய் காட்டியது.

ஸ்ரீராம் தாளாத அதிர்ச்சியில் இருந்தான். கோபம், பதட்டம், கவலை அனைத்தும் ஒரு சேர அவனை ஆட்கொண்டது. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மிதிலாவிடம் கேட்டு விட்டான் யுவராஜ். கொப்பளிக்கும் கோபத்தை தன் முஷ்டியை மடக்கி அடக்க முயன்றான் ஸ்ரீராம். யுவராஜை தூக்கி போட்டு மிதிக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. அதே நேரம், இனம் புரியாத பயம் அவனை ஆட்கொண்டது. இப்போது அவன் என்ன செய்யப் போகிறான்? இதைப் பற்றி அவன் மிதிலாவிடம் கேட்க முடியுமா? எந்த உரிமையில் கேட்பது? *ஆமாம், நான் யுவராஜை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்* என்று அவள் கூறிவிட்டால் என்ன செய்வது? தான் அளித்த பரிசை திருப்பி அளித்துவிட்டதை போல, அவள் அதையும் செய்வாள்.

அல்லது... *என்னை திருமணம் செய்து கொள்* என்று கேட்கலாமா...? ஒப்புக் கொள்வாளா? நிச்சயம் மாட்டாள்... முகத்துக்கு நேராக, முடியாது என்று கூறுவாள். அவள் அதை நிச்சயம் செய்வாள். அவளுக்கு அதை செய்யும் தைரியம் இருக்கிறது. அவன் அளித்த பரிசையே அவள் ஏற்றுக் கொள்ளவில்லையே... அப்படி இருக்கும் போது, அவனையா ஏற்றுக்கொள்வாள்...? அதுவும், காத்திருப்போர் பட்டியலில், யுவராஜ் இருக்கும் போது...? தன்னை மறுக்க அவளுக்கு சந்தர்ப்பம் வழங்க கூடாது... நிச்சயம் கூடாது... இதை வேறு விதத்தில் புத்திசாலித்தனமாக தான் கையாள வேண்டும். இப்பொழுது தானே யுவராஜ் அவளிடம் பேசியிருக்கிறான்...! அவள் இன்னும் யுவராஜுக்கு எந்த பதிலும் கூறவில்லை. அவளே கூட இதை எதிர்பார்க்கவில்லை போல தெரிகிறது. அதைப் பற்றி யோசிக்க அவள் நிச்சயம் நேரம் எடுத்துக் கொள்வாள். அவள் எடுத்துக் கொள்ளப் போகும் அந்த நேரம் தான் ஸ்ரீராமுக்கு வழங்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பம். அமைதியாக சென்று தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now