34 சத்தியம்

1.9K 100 10
                                    

34 சத்தியம்

ஸ்ரீராம், மிதிலாவின் கார் பயணம் அமைதியுடன் நகர்ந்தது. தன்னை திருமணம் செய்து கொள் என்று கேட்டு, தான் மறுத்தளித்தவருடன் பக்கத்தில் அமர்ந்திருப்பது என்பது சங்கடமான விஷயம். அவள் மறுத்ததற்கு காரணம், அவன் தலைக்கனம் பிடித்தவன் என்பதால். கசப்பான கடந்த காலத்தை உடைய அவள், திருமணம் செய்துக் கொள்ள தயங்குவது நியாயம் தானே...? அதிலும் ஸ்ரீராமை போல பணக்காரனை... தனது கௌரவத்தை பெரிதாய் நினைப்பவனை... அதை அவளே நேரில் பார்த்திருக்கிறாளே...!

நெருப்பை பார்த்து, அவள் ஏன் பதட்டப்பட்டு மயங்கி விழுந்தாள் என்பதை நிச்சயம் அவளிடம் ஸ்ரீராம் கேட்பான். அவள் நினைத்தது சரி தான். அவளிடம் அதைப் பற்றி கேட்க வேண்டும் என்று தான் ஸ்ரீராமின் மனம் துடித்தது. அதற்கு சந்தர்ப்பம் அளிக்க விரும்பாமல், கண்ணை மூடி தூங்குவது போல் பாசாங்கு செய்தாள் மிதிலா.

வாழ்க்கை மிகவும் விசித்திரமானது... நாம் எதை நினைக்கவே கூடாது என்றும், மறக்கவும் நினைக்கிறோமோ அதைத் தான், நமக்கு அதிகம் ஞாபகப்படுத்தி வேடிக்கை காட்டுகிறது. அதே போலத் தான், மிதிலா மறக்க நினைக்கும் அந்த கோர சம்பவம், மூடியிருந்த அவள் விழிகளில் நிழலாடியது.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன், விழுப்புரம்...

தனது அம்மா, மண்ணெண்ணையை ஸ்டவ்வில் ஊற்றுவதை, பக்கத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் பன்னிரெண்டு  வயது சிறுமியான மிதிலா.

தனது வீட்டிற்கு திடீர் விஜயம் செய்த பெரியப்பா குடும்பத்தினரை பார்த்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்த மிதிலா,

"அம்மா, பெரியம்மா வந்திருக்காங்க" என்று கூற, தான் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு தன் அக்காவிடம் சென்றார் மிதிலாவின் அம்மா வசந்தா.

"எப்படி இருக்க மிதிலா?" என்றார் அவளுடைய பெரியப்பா ஆனந்தன்.

"நான் நல்லா இருக்கேன் பெரியப்பா"

மிதிலாவின் அம்மா வசந்தா, தனது அக்கா சாந்தாவையும்,  மாமாவையும் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார். மிதிலா, தனது அக்கா பிருந்தாவிடம் ஓடிச் சென்று, அவளை கட்டிக் கொண்டாள்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now