37 அணுகுமுறை

2K 100 9
                                    

37 அணுகுமுறை

தனது கணினியில் வேலை செய்து கொண்டிருந்தாள் மிதிலா. அவளது விரல்கள் தான் வேலை செய்து கொண்டிருந்தன. ஆனால், அவளது மனமோ ஸ்ரீராமுடைய கோரிக்கையை நினைத்துக் கொண்டிருந்தது. வழக்கமாய் அவன் யாரிடமும் கோரிக்கை வைப்பதில்லை. உத்தரவிடுவது தான் அவனது வழக்கம். இப்பொழுது கூட, அவன் அவளின் முன் வைத்திருப்பது, கோரிக்கை என்னும் பெயரில் உத்தரவு தான். அவள் அவனை மீண்டும் மறுத்தளிக்க முடியும் தான். ஆனால், எவ்வளவு நாளைக்கு? அதன் பிறகு என்ன ஆகும்? அவளை ஒப்புக்கொள்ள செய்யும் வரை ஸ்ரீராம் ஓய மாட்டான். அவனை எதிர்த்து நிற்பது புத்திசாலித்தனமானதா? அப்படி என்றால் அவள் என்ன செய்ய வேண்டும்? அவனை மணந்து கொள்ளத் தான் வேண்டுமா? அவளுக்கு வேறு வழி இருக்கிறதா? ஆனால், அவள் ஒரு கொலைகாரனின் மகள். ஸ்ரீராமை திருமணம் செய்துகொள்ள அவளுக்கு என்ன தகுதி இருக்கிறது? அவனிடம் அதை அவள் எப்படி கூறுவது?

அவளை மணந்து கொள்ள வேண்டும் என்று ஸ்ரீராம் முடிவெடுத்துவிட்டால் அதை அவன் எப்படியும் செய்தே தீருவான். அவள் அவனை மணந்து கொண்டு தான் தீரவேண்டும். அவளுக்கு வேறு வழியில்லை. ஆனால், இதில் அவளுடைய தவறு என்ன இருக்கிறது? அவன் தானே அவளை திருமணம் செய்து கொண்டே தீரவேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கின்றான்...? அவள் கூறுவதை கேட்க கூட அவன் தயாராக இல்லையே... அப்படி இருக்கும் போது, அவள் என்ன தான் செய்வது?

அவளது தோளை யாரோ தொட திடுக்கிட்டாள் மிதிலா. லட்சுமன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

"என்ன ஆச்சு மித்து?"

ஒன்றும் இல்லை என்று தலையசைத்தாள் மிதிலா.

"சாரி மித்து... என்னால தான் நீ இப்போ பிரச்சினையில இருக்க"

"இதுல உன்னோட தப்பு எதுவும் இல்ல. சொல்ல போனா, இதுல யாருடைய தப்பும் இல்ல..."

"ராமு உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறதை என்னால நம்பவே முடியல. இதுக்கு முன்னாடி, அவன் கல்யாணம் பண்ணிக்கணும்னு விருப்பம் காட்டினதே இல்ல. பரத், ப்ரியா அண்ணியை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னப்போ, பாட்டி, ராமுவையும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டாங்க. ஆனா, அவன் மறுத்துட்டு, பரத் கல்யாணம் நடக்க ஹெல்ப் பண்ணினான்"

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now