40 கைப்பேசி அழைப்பு

1.9K 97 14
                                    

40 கைப்பேசி அழைப்பு

ஸ்ரீராமின் அறையில் தனது தந்தையைப் சந்தித்துவிட்டு, தனது அறைக்கு வந்த மிதிலாவுக்கு, இன்டர்காமில் ஒரு அழைப்பு வந்தது. அதை அவள் உடனே ஏற்று பேசினாள்.

"மிதிலா, யாரோ உங்ககிட்ட பேசணுமாம். கனெக்ட் பண்ணவா?" என்றாள் ரிசப்ஷனிஸ்ட் சௌமியா.

"யாருன்னு கேட்டீங்களா  சௌமியா?"

"உங்க ஃப்ரெண்டுன்னு சொல்றாங்க"

"என்னோட ஃப்ரண்டா?" என்று முகம் சுளித்தாள் மிதிலா.

அவளது தோழியாக இருந்தால், அவளது கைப்பேசி எண்ணுக்கு அழைக்காமல், எதற்காக அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும்? யாரது?

"சரி கனெக்ட் பண்ணுங்க" என்றாள் மிதிலா.

அந்த அழைப்பை, மிதிலாவின் அறையிலிருந்த தொலைபேசியுடன் இணைத்தாள் சௌமியா.

"மிதிலாவா பேசுறீங்க?"  என்றாள் அந்தப் பக்கம் பேசியவள்.

"ஆமாம், நீங்க யார் பேசுறீங்க?"

"நான் யாருங்கிறது முக்கியமில்ல. நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இருக்கு. அதை சொல்லத் தான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன்."

"என்ன விஷயம்?" என்றாள் மிதிலா.

"நீங்க ஏமாத்தபட்டுக்கிட்டு இருக்கீங்க"

"நானா?"

"ஆமாம்"

"யார் என்னை ஏமாத்துறது?"

"எஸ் ஆர் கே"

அதைக் கேட்டு திகைத்து நின்றாள் மிதிலா.

"இதைக் கேட்டு நீங்க அதிர்ச்சியாவிங்கன்னு எனக்கு தெரியும். எந்த பெண்ணா இருந்தாலும் தான் கல்யாணம் பண்ணிக்க போறவரை பத்தி கேட்டா அதிர்ச்சியா தான் இருக்கும்..."

அமைதி காத்தாள் மிதிலா.

"உங்களுக்கு லயாவை தெரியுமா... பிரியாவுடைய தங்கச்சி...?"

"ம்ம்ம்"

"அவளுக்கும் எஸ்ஆர்கே வுக்கும் தொடர்பு இருக்கு. அவ இந்தியா வந்ததே எஸ்ஆர்கேவுக்காக தான். தன்னுடைய பிசினஸ் எஸ்டாபிளிஷ்மெண்ட்டுகாகத் தான் எஸ்ஆர்கே உங்களை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறார். அவருக்கு வேண்டியது உங்களுடைய மூளை மட்டும் தான். நீங்க அவர் கூட இருந்தா, எல்லாத்தையும் தன்வசமாக்க முடியும்னு அவர் நினைக்கிறார். உங்களை வேற எந்த கம்பெனிக்கும் போக விடாமல் தடுக்கத் தான் அவர் உங்களை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறார்"

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now