46 விவாதம்

2.1K 112 19
                                    

46 விவாதம்

எஸ் ஆர் ஃபேஷன்ஸ்

தன்னுடைய பெயரின் முதல் எழுத்தை மிதிலாவின் கழுத்தில் பார்க்கும் ஆவலுடன் காத்திருந்தான் ஸ்ரீராம். அவள் அலுவலகத்திற்குள் நுழைவதைப் பார்த்தான். ஆனால், அவள் தனது துப்பட்டாவை வழக்கத்திற்கு மாறாக அணிந்திருந்தாள். வழக்கமாய், அவள் துப்பட்டாவை ஒரு தோளில் மட்டும் மடித்து போடுவது தான் வழக்கம். ஆனால் அன்று, இரண்டு தோளிளும் அணிந்து வந்தாள். முக்கியமாய், ஸ்ரீராம் கொடுத்த சங்கிலியை மறைத்து... அதைப் பார்த்து புன்னகை பூத்தான் ஸ்ரீராம். இப்படி துப்பட்டாவை அணிந்தாலும் அவள் அழகாகத் தான் இருக்கிறாள். சாவகாசமாய் வந்து தன் நாற்காலியில் அமர்ந்து, அவளை அழைத்தான்.

அவனது எண், தனது கைப்பேசியில் ஒளிர்ந்ததை பார்த்த உடனேயே, அவளது கரங்கள், அனிச்சையாய் அவள் கழுத்திலிருந்த டாலரை தொட்டுப் பார்த்தது.

"குட் மார்னிங் சார்"

"குட் மார்னிங். கம் டு மை கேபின்"

"எஸ் சார்"

அந்த டாலர் சரியாக மறைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு, அவனது அறையின் கதவைத் தட்டினாள் மிதிலா.

"கம் இன், மிதிலா"

உள்ளே நுழைந்தாள் மிதிலா. அவளது கழுத்தில் ஊன்றி இருந்த அவனது கண்கள் அவளை சங்கடப்படுத்தியது. தனது மேஜையின் மீது ஒரு கோப்பை வைத்தான் ஸ்ரீராம்.

"இது தான் நம்மளுடைய நியூ ப்ராஜெக்ட் ஃபைல். அதை படிச்சு பார்த்துட்டு உன்னோட ஐடியாவை சொல்லு" என்று முதல் முறையாக அவளை ஒருமையில் அழைத்தான் ஸ்ரீராம். தன் பெயரைத் தான் அவள் கழுத்தில் ஏற்கனவே பதித்தாகிவிட்டதே.

அந்த வித்தியாசத்தை உணர்ந்திருந்த போதிலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,

"எஸ் சார்" என்றாள் மிதிலா.

தனது அறைக்கு எடுத்துச் சென்று, அதை படித்துப் பார்க்கும் எண்ணத்தில், அதை கையில் எடுத்துக்கொண்டு திரும்பினாள் மிதிலா.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now