47 நிச்சயதார்த்தம்

2.1K 99 12
                                    

47 நிச்சயதார்த்தம்

தான் ஒரு பள்ளிக்கூட மாணவனை போல சண்டையிட்டு கொண்டிருந்ததை மிதிலா பார்த்துவிட்டதால், சங்கடத்திற்கு ஆளானன் ஸ்ரீராம். அவனை விட அதிக சங்கடத்திற்கு ஆளானாள் மிதிலா. தன்னை சந்திக்க வேண்டும் என்பதற்காக தன் அக்காவிடம் ஸ்ரீராம் இப்படி சண்டையிடுவான் என்று அவள் நினைத்திருக்கவில்லை. அனைவரின் முகத்திலும் கிண்டலான புன்னகை தவழ்ந்ததால், தலையை குனிந்துகொண்டாள் மிதிலா. ஸ்ரீராமை பார்த்து நக்கலாய் சிரித்தாள் ஊர்மிளா. தன்னை சுதாகரித்து கொண்ட ஸ்ரீராம், அமைதியாய் அமர்ந்துகொண்டான்.

"உன் மனசு எனக்கு தெரியாதா ராமு? உன்னை மிதிலா வீட்டுக்கு வர கூடாதுன்னு சொன்னப்போ நீ ரொம்ப அப்செட் ஆயிட்ட. அதான், ஊர்மிளாகிட்ட சொல்லி மிதிலாவை இங்க வரவழைச்சிட்டு, உன்னை நான் வர சொன்னேன்."

ஸ்ரீராம் மெல்லிதாய் சிரிக்க, தன் விழிகளை விரித்து ஊர்மிளாவை பார்த்து *அப்படியா?* என்பதை போல தலையாசைத்தாள் மிதிலா.

"நீ தானே சொன்ன, நம்ம ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸா இருக்குறதை விட, எல்லோரோடவும் சேந்து ஒரே குடும்பமா இருக்கணும்னு...? அதான், அக்கா கேட்டப்போ அதுக்கு நான் ஒதுக்கிட்டேன்" என்று கன்னத்தில் குழி விழ சிரித்தாள் ஊர்மிளா, மிதிலாவை மேலும் சங்கடத்திற்கு உள்ளாக்கி.

"அப்படியா மிதிலா? நீங்க அப்படியா சொன்னீங்க?" என்றாள் நர்மதா புன்னகையுடன்.

"மிதிலா ரொம்ப நல்ல பொண்ணு. அவளை மாதிரி ஒரு மருமகள் உங்களுக்கு கிடைக்க நீங்க ரொம்ப குடுத்து வச்சிருக்கனும்" என்றார் ஊர்மிளாவின் அம்மா சுகன்யா, மிதிலாவை சங்கடத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்று.

"எங்களுக்கு மிதிலாவை பத்தி நல்லாவே தெரியும். அதுக்காகத் தான் அவளை எங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போயிடணும்னு நாங்க விடாப்பிடியா இருக்கோம்" என்றார் பாட்டி.

"அவ உங்க கூட இருந்தா, நீங்க எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டியதில்ல. அவ ஒரு நல்ல *சொல்யூஷன் மேக்கர்* எல்லாப் பிரச்சனைகளையும் கண் சிமிட்டும் நேரத்தில் சரி பண்ணிடுவா." என்று மிதிலாவின் தோளைத் தட்டினார் சுகன்யா.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now