52 தனிந்த நெருப்பு

2K 105 12
                                    

52 தனிந்த நெருப்பு

ஸ்ரீராம் கூறிய, நீல நிற சட்டை அணிந்த மனிதனை தேடிக்கொண்டிருந்தான் குகன், நெருப்பைப் பற்ற வைத்த உடனேயே அங்கிருந்து ஓடிவிட்டான் அந்த மனிதன் என்பது தெரியாமல். தனக்கு வழங்கப்பட்ட வேலையை முடித்தவுடன் அவன் செய்தது, அங்கிருந்து ஓட்டம் எடுத்தது தான். அப்படி செய்யச் சொல்லி தான் அவனுக்கு உத்தரவு. அப்படி இருக்கும் போது, அந்த மனிதனை பிடிப்பது இயலாத காரியம் தானே...!

........

ஸ்ரீராமும், மிதிலாவும் வெவ்வேறு மனநிலையில் நின்றிருந்தார்கள். அவளை சமாதானம் அடையச் செய்ய வேண்டும் என்று ஸ்ரீராமும், தன்னிலையை முழுமையாய் இழந்து மிதிலாவும் இருந்தார்கள். அப்பொழுது, கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

"மிதிலா..." என்று அழைத்தபடி கதவைத் தட்டினார் சாந்தா.

அப்பொழுது தான் தனது சுயநினைவு பெற்றாள் மிதிலா. தான் ஸ்ரீராமின் நெஞ்சில் சாய்ந்து நின்றிருந்த நிலையை பார்த்து அதிர்ந்தாள் அவள். ஸ்ரீராமை விட்டு விலகி பதட்டத்துடன் பின்னால் நகர்ந்தாள். பின்னால் இருந்த சுவற்றில் மோதிக் கொண்டு, கதவை நோக்கி, அவள் பரபரப்பாய் நகர்ந்ததை பார்த்த பொழுது ஸ்ரீராமுக்கு பாவமாய் இருந்தது.

கதவைத் திறந்த மிதிலா, சாந்தாவை பார்த்தவுடன் அவரை கட்டி அணைத்துக் கொண்டாள். சமாதானம் அடைய செய்யும் நோக்கில், அவள் தலையை வருடிக் கொடுத்தார் சாந்தா.

"ஒன்னும் இல்லடா" என்றார்.

சரி என்று தலையசைத்தாள் மிதிலா. தரையில் ஏறிந்து கிடந்த சில திரைச்சீலைகளின் மீது மிதிலாவின் பார்வை சென்றது.

"யாருக்கும் எதுவும் ஆகலையே?" என்றாள் பயம் தோய்ந்த குரலில்.

"எல்லாரும் நல்லா இருக்காங்க. யாருக்கும் எதுவும் ஆகல"

நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் மிதிலா. அறையை விட்டு வெளியே வந்த ஸ்ரீராமின் கரங்களைப் பற்றிக் கொண்டார் ஆனந்தன்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now