54 புனித பந்தம்

2.1K 108 13
                                    

54 புனித பந்தம்

திருமண நாள்

அன்று மாலை திருமணம். ஸ்ரீராமின் குடும்ப வழக்கத்தின் படி, அவர்கள் மாலையில் திருமணம் செய்பவர்கள். மணப்பெண் அணிய வேண்டிய திருமண புடவையை கொடுக்க, தன் கணவன் தினேஷுடன் ஆனந்தன் குடில் வந்திருந்தாள் நர்மதா. அவர்களை வரவேற்றார் சாந்தா.

அப்போது, தனது உடைமைகளை கணவன் வீட்டிற்கு எடுத்துச் செல்ல, அவற்றை பைகளில் அடுக்கி தயார்  கொண்டிருந்தாள் மிதிலா.

"மிதிலா, இங்க வா. இங்க யாரு வந்து இருக்கான்னு பாரு" என்றார் சாந்தா.

மிதிலாவுக்கு பக்கென்றது. வந்திருப்பது யார்? ஸ்ரீராமாக இருக்குமோ? என்று அவள் மனம் எண்ணியது, அது ஸ்ரீராமாக  இருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்த பின்னும். அடுத்து வந்த சாந்தாவின் வார்த்தைகள் அதை உறுதிப்படுத்தின.

"நர்மதா வந்திருக்காங்க பாரு"

நர்மதா அவளது அறைக்குள் நுழைவதைப் பார்த்து புன்னகை புரிந்தாள் மிதிலா.

"ஹாய், கல்யாண பொண்ணு..." என்று சிரித்தாள் நர்மதா.

"வாங்கக்கா" என்று புன்னகைத்தாள் மிதிலா.

"இது உங்க கல்யாண புடவை... உங்களுக்காக ஸ்பெஷலா ராமு டிசைன் பண்ணது..." என்றாள் நர்மதா.

அது மிதிலாவை ஆச்சரியப்படுத்தியது என்று கூறத் தேவையில்லை. இந்த புடவை, ஸ்ரீராம் டிசைன் செய்ததா? எப்பொழுது? அவளுக்கு தெரியாமல் அவன் அதை எப்படி டிசைன் செய்திருக்க முடியும்? அவள் தான் முழு நேரமும் அலுவலகத்திலேயே இருக்கிறாளே...! அப்படி இருக்கும் பொழுது இது எப்படி சாத்தியம்? நர்மதாவின் கையிலிருந்து, ஆர்வம் தாங்காமல் அந்த புடவையை வாங்கினாள். ஆனால், நர்மதா இருந்ததால், அதை பார்க்காமல் நின்றாள்.

"எங்க வீட்டுக்கு வர நீங்க ரெடியா?" என்றாள் நர்மதா சந்தோஷமாய்.

மிதிலா எதுவும் கூறுவதற்கு முன்,

"அவ எப்பவோ ரெடி. அவ திங்ஸை கூட பேக் பண்ணிட்டா" என்று கிண்டலாய் சிரித்தாள் அருணா.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now