60 குகனின் திட்டம்

2.1K 105 13
                                    

60 குகனின் திட்டம்

மிதிலாவின் கையிலிருந்த கிண்ணத்தை கவனித்தான் ஸ்ரீராம். அதில் இருந்தது என்ன என்பது அவனுக்கு புரியவில்லை. அவனை நோக்கி வந்த அவள், அவன் அமர்ந்திருந்த சோபாவுக்கு முன்னால் இருந்த டீப்பாயின் மீது அமர்ந்தாள்.

"இது என்னது?" என்றான் புருவத்தை நெறித்தபடி.

"மஞ்சளும் வேப்பிலையும் சேத்து அரைச்ச பேஸ்ட். காயத்துக்கு இதை மருந்தா போடுவாங்க"

*மார்டன்* மருந்துகளுக்கு பின்னால் செல்லும் வழக்கமுடைய ஸ்ரீராம், அதை வினோதமாய் பார்த்தான்.

"இது உண்மையிலேயே க்யூர் பண்ணுமா?" என்றான் சந்தேகத்துடன்.

"ஆமாம். எங்க அம்மா பெரும்பாலும் ஹோம் ரெமிடீஸ் தான் யூஸ் பண்ணுவாங்க. அதுல இதுவும் ஒன்னு"

அந்த மருந்தை இட்டுக் கொள்ள தயங்கினான் ஸ்ரீராம். அதைப் பிடிக்காமல் அல்ல, அவன் கையில் மிதிலா கட்டியிருந்த அவள் துப்பட்டாவின் துணியை அவள் நீக்கி விடுவாளே. அதை செய்ய அவனுக்கு மனம் வரவில்லை.

"எனக்கு இப்போ பரவாயில்லன்னு நினைக்கிறேன்" என்றான்.

"அப்படியா? அப்போ நீங்க இதை போட்டுக்கிட்டா ரொம்ப சீக்கிரம் க்யூர் ஆயிடுவீங்க"

"இல்ல, நான் வந்து..."

"சரி... உங்களுக்கு பிடிக்கலைன்னா நான் கம்பல் பண்ணல" என்று அங்கிருந்து எழ போனவளை,

"இல்ல நான் அப்படி சொல்லல" என்று தன் கையை அவளை நோக்கி நீட்டினான்.

அவள் துப்பட்டாவின் துணியை தன் கையிலிருந்து இழக்க அவன் விரும்பவில்லை என்றாலும், அவள் தனக்கு செய்யப் போகும் மருத்துவ உதவியையும் வேண்டாம் என்று கூற அவனுக்கு மனம் வரவில்லை.

அந்த துணியின் முடிச்சை அவிழ்த்து, அதில் ஏதாவது ரத்தக்கறை இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தாள் மிதிலா. அந்தக் காயத்தின் மீது பஞ்சை வைத்து கட்டியதால் அதில் எந்தத் கறையும் இருக்கவில்லை. அதை தூக்கி எறியாமல் தன் தொடையின் மீது வைத்துக் கொண்டாள் மிதிலா. அதே துணியை அவள் மீண்டும் அவனுக்கு கட்டிவிட போகிறாள் என்று அவனுக்கு புரிந்தது. அது ஸ்ரீராமுக்கு நிம்மதியை தந்தது. இந்த காதல் தான் மனிதனை எப்படி எல்லாம் மாற்றி விடுகிறது... ஒரு துண்டு துணிக்காக எவ்வளவு பதற வைக்கிறது...!

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now