62 மிதிலாவின் அதிரடி...

2.1K 102 13
                                    

62 மிதிலாவின் அதிரடி...

"எனக்கு தெரியும்" குகா என்று மிதிலா கூறியதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தான் குகன்.

மிதிலாவுக்கு ஏற்கனவே தெரியுமா? ஸ்ரீராமை பற்றி குகனுக்கு தெரியும் தான். ஆனால் அவன், தன் கன்னித்தன்மையையே பரிசோதிக்கும் அளவுக்கு செல்வான் என்பது அவனுக்கு தெரியாது அல்லவா...!

"உங்களுக்கு தெரியுமா?"

ஆமாம் என்று தலையசைத்தாள் மிதிலா.

"அன்னைக்கு, எனக்கு லயா ஃபோன் பண்ணி, எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல பிரச்சனை ஏற்படுத்த முயற்சி பண்ணப்போ, அவர் தன்னை நிரூபிக்க முயற்சி பண்ணாரு. அன்னைக்கே நான் தெரிஞ்சுக்கிட்டேன், அவர் உறவுமுறையை எவ்வளவு மதிக்கிறார்னு."

அவன் எப்படித் தன்னை நிரூபிக்க முயன்றான் என்று கேட்கவில்லை குகன். அதை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஸ்ரீராமுடைய வழிமுறைகள் எப்பொழுதுமே தனித்தன்மை வாய்ந்தது. அவனுக்கு தெரியும், நிச்சயம் ஸ்ரீராம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு ஏதாவது ஒன்றை செய்திருப்பான் என்று. அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ஏனென்றால், அவனைப் பற்றி மிதிலா புரிந்து கொண்டுவிட்டால் அதை விட வேறு நிம்மதி எதுவும் இல்லை. அவர்களை இணைத்து வைக்க வேறு யாரும் முயல வேண்டிய அவசியமும் இல்லை. அதை மிதிலாவே பார்த்துக் கொள்வாள்.

"நீங்க அதை புரிஞ்சுகிட்டிங்களே... எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்றான் குகன் நிச்சயமான சந்தோஷத்துடன்.

"நீங்க ரொம்ப நல்ல ஃப்ரெண்ட் குகா. உங்களை மாதிரி ஒரு உண்மையான ஃபிரண்டை நான் பார்த்ததே இல்ல" என்றாள் மனமாற.

"நான் நல்லவனா, கெட்டவனாங்குறது எனக்கு எதிரில் இருக்கிறவங்களை பொறுத்த விஷயம். எஸ்ஆர்கேவுக்கு நான் உண்மையா இருக்கேன்னா, அவனும் எனக்கு நல்லதை மட்டும் தான் நினைப்பான்... உங்களை மாதிரியே. அவன்கிட்ட இருக்கிற ஒரே பிரச்சனை, அவன் கொஞ்சம் சிடுமூஞ்சி. அவன் சிரிக்கும் போது ரொம்ப அழகா இருப்பான். ஆனா சிரிக்கவே மாட்டான்"

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now