65 காதல் ஒப்புகை

2.2K 110 16
                                    

65 காதல் ஒப்புகை

ஸ்ரீராம் தன் கரத்தை நீட்டி தன்னை அழைத்ததை கண்டு திகைப்படைந்தாள் மிதிலா. அவனிடம் நெருங்குவதற்கு முன், அவள் மனதில் இருப்பதை எல்லாம் அவனிடம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்று அவள் எண்ணியிருந்தாள். இப்பொழுது அவன் இருக்கும் நிலையில் அவள் கூறிவதை அவன் கேட்பானா? கேட்பான்... இப்பொழுது அவள் எது சொன்னாலும் அவள் கேட்பான்... அதை ஏற்றும் கொள்வான்... ஏனென்றால், அவன் இப்பொழுது உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறான். இப்பொழுது அவனிடம் எதையும் கூறுவது சரியாக இருக்காது. அவன், தன்னை தெளிந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினாள் மிதிலா. இந்த பிரபஞ்சத்தில் மிகவும் வேகமாய் பயணம் செய்யக்கூடியது *ஒளி* என்பது நாம் அறிந்தது தான். ஆனால் ஒளியை விட வேகமாகப் பயணிக்கக் கூடியது வேறு ஒன்று உள்ளது. அது மனிதனின் மனம். ஒரு நொடியில் இந்த பிரபஞ்சத்தையே சுற்றி வரும் வல்லமை படைத்தது மனித மனம். அப்படித் தான் மிதிலாவும் கண் இமைக்கும் நேரத்தில் இவ்வளவையும் யோசித்து முடித்தாள்.

ஆனால் ஸ்ரீராமுக்கு, அந்த ஒரு நொடி கூட ஒரு யுகம் போல் தோன்றியது. மேலும் பொறுக்க மாட்டாதவனாய், மிதிலாவின் கையை பிடித்து, தன்னை நோக்கி இழுத்து, பல நாளாய் காத்திருந்த ஆசையுடன் அவளை அணைத்துக் கொண்டான். ஸ்ரீராமின் அந்த செயலுக்குப் பிறகு, அவன் கையில் இருந்து வெளிவரும் எண்ணம் மிதிலாவுக்கு இருக்கவில்லை. அவனது கட்டுடலை தன் பூங்கரங்களால் சுற்றி வளைத்துக் கொண்டாள் மிதிலா, ஸ்ரீராமின் இதழ்களில் புன்னகையை மலர செய்து. அவளது கழுத்திடுக்கில் தன் முகத்தை அவன் புதைத்துக் கொண்ட போது, அவளது மூலாதாரமே நடுக்கம் கண்டது. தனது கட்டுப்பாட்டை இழந்து விடாமல் இருக்க அவள் கடவுளை வேண்டினாள். கடவுளை வேண்டினாலும் அவனிடமிருந்து விலக அவள் நினைக்கவில்லை. ஒருமித்த மனதுடன் அவன் அணைப்பு தந்த கதகதப்பை ஏற்றுக்கொண்டாள் மிதிலா.

மிதிலாவின் நிலையே இப்படி என்றால், ஸ்ரீராமை பற்றி நாம் கேட்க வேண்டியதே இல்லை அல்லவா...! அவன் மிதிலாவிடம் தன்னை இழந்து கொண்டிருந்தான். அவளுக்குள் தொலைந்து கொண்டிருந்தான். சிறிது நேரம் வரை எந்தவித அசைவும் இன்றி நின்றான். அனைத்தையும் மறந்து... தன்னையே மறந்து.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now