68 மிதிலாவின் அப்பா

2.1K 113 18
                                    

68 மிதிலாவின் அப்பா

ஆனந்த குடில்

சாந்தாவின் முகம் வெளிறிப் போனது தன் முன்னால் நின்று கொண்டிருந்த காமராஜை பார்த்த போது. இவன் ஜெயிலில் இருந்து விடுதலையாகி விட்டானா?

"எப்படி இருக்கீங்க சாந்தாக்கா?" என்றார் காமராஜ்.

"நல்லா இருக்கேன்" என்றார் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சாந்தா.

"மிதிலா எங்க இருக்கா?"

"எனக்கு தெரியாது"

"நீங்க பொய் சொல்றீங்க. எனக்கு தெரியும், நீங்களும் ஆனந்தன் அண்ணனும் தான் அவளை உங்களோட கூட்டிகிட்டு வந்துட்டீங்க"

"இப்போ அதுக்கு என்ன? உன்னை மாதிரி எங்களையும் அவளை பொறுப்பில்லாம விட்டுட்டு வர சொல்றியா? இப்போ எதுக்கு நீ அவளைப் பத்தி கேட்கிற? நான் எதுக்கு அவளைப் பத்தி உன்கிட்ட சொல்லணும்? அவளை நிம்மதியா இருக்க விட மாட்டியா நீ? அவளுடைய வாழ்க்கையை கெடுத்துடாத. தயவுசெய்து புரிஞ்சுக்கோ"

"இல்ல சாந்தாக்கா... நான் நிச்சயமா அவளுடைய வாழ்க்கையைக் கெடுக்க மாட்டேன். நான் தான் அவளுடைய அப்பான்னு சத்தியமா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்"

"எதுக்காக நீ இப்ப அவளை பார்க்கணும்?"

"ஏன்னா நான் அவளோட அப்பா... என் மகளை பாக்கணும்னு நான் நினைக்க கூடாதா?"

"கூடாது... அவ எங்க மக. அவளுடைய அப்பான்னு சொல்லிக்க உனக்கு என்ன உரிமை இருக்கு?"

"எனக்கு எந்த உரிமையும் இல்ல. என் மகளை வளத்து ஆளாக்கினதுக்காக உங்களுக்கு நான் கடன் பட்டிருக்கேன். அவகிட்ட நான் மன்னிப்பு கேக்கணும். அவ்வளவு தான்"

"நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? அவ உன்னை மன்னிப்பான்னு நினைக்கிறியா? அவ உன்னை தன் மனசோட அடி ஆழத்திலிருந்து  வெறுக்கிறா. உன்னால தானே அவ தன்னுடைய அம்மாவை இழந்தா..." என்று சீறினார் சாந்தா.

"அதுக்காகத் தான் ஒரே ஒரு தடவை அவளைப் பார்த்து என் பக்க நியாயத்தைக் பேசணும்னு நினைக்கிறேன்"

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now